28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
12 1455267393 9 almond lemon
தலைமுடி சிகிச்சை

உங்க தலையில வெள்ளை முடி அதிகமா இருக்கா? அதைப் போக்க இதோ சில வழிகள்!

வயதான காலத்தில் வர வேண்டிய வெள்ளை முடி தற்போது இளமையிலேயே பலருக்கு வந்துவிடுகிறது. இதற்கு மரபணுக்கள் ஓர் காரணமாக இருந்தாலும், வேறுசில காரணங்களும் உள்ளன. வெள்ளை முடி இளமையிலேயே வருவதால், பலரும் முதுமைத் தோற்றத்துடன் காணப்படுகின்றனர்.

இதனை மறைப்பதற்காக கண்ட ஹேர் கலரிங், ஹேர் டைகளை வாங்கிப் பயன்படுத்தி, முடி மற்றும் ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். முக்கியமாக இப்படி செய்வதால் முடி அதிகம் உதிர்வதோடு, அழற்சி ஏற்பட்டு, விரைவில் வழுக்கைத் தலையை பெற நேரிடுகிறது.

ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை வெள்ளை முடியைப் போக்க சில எளிய ஆயுர்வேத வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி உங்கள் வெள்ளை முடியைப் போக்குங்கள்.

நெல்லிக்காய்

4-5 நெல்லிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை

ஒரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் கறிவேப்பிலை ஒரு கையளவு சேர்த்து மிதமான தீயில் சூடேற்றி இறக்கி, குளிர வைத்து, பின் அந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், நரைமுடி வருவதைத் தடுக்கலாம்.

பாதாம் எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் நெல்லி சாறு

4 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாறு மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து 45 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

எலுமிச்சை சாறு மற்றும் நெல்லிக்காய் பொடி

4 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியில் 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து, அத்துடன் 2 டீஸ்பூன் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 25 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு ஏதும் பயன்படுத்தாமல் அலச வேண்டும்.

ஹென்னா மற்றும் வெந்தயப் பொடி

2 டீஸ்பூன் ஹென்னாவில், 1 டீஸ்பூன் வெந்தயப் பொடி, 1 டீஸ்பூன் தயிர், 1 டேபிள் ஸ்பூன் காபி பொடி, 2 டேபிள் ஸ்பூன் புதினா ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் துளசி இலைச் சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 2-4 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை பின்பற்றி வந்தால், வெள்ளை முடியைத் தடுக்கலாம்.

பாதாம் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய்

பாதாம் எண்ணெயுடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, வாரத்திற்கு 2-3 முறை ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நரைமுடியைத் தடுக்கலாம்.

வெண்ணெய்

வெள்ளை முடியைப் போக்க மாட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட வெண்ணெய் மிகவும் உதவியாக இருக்கும். எனவே அடிக்கடி வெண்ணெய் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து வாருங்கள்.

எலுமிச்சை சாறு மற்றும் பாதாம்

எண்ணெய் வெள்ளை முடிக்கு மிகவும் சிறப்பான ஆயுர்வேத சிகிக்சை என்றால் பாதாம் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்து அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், வெள்ளை முடியைப் போக்கலாம்.

12 1455267393 9 almond lemon

Related posts

முயன்று பாருங்கள் கருமையான தலைமுடி பெற கருப்பு மிளகு பயன்படுத்துங்கள்…

nathan

தலைமுடியை வலிமையாக்கும் வீட்டு வைத்தியம்

nathan

தலை குளிர்மையாக இருப்பதற்கு

nathan

தலைக்கு சீகைக்காயைப் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!!!

nathan

கற்றாழையானது கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக பயன்படுகின்றது

nathan

உங்க தலைமுடி அளவுக்கதிகமா உதிர்ந்து சொட்டையாகுதா? முடி செழித்து வளர 17 ஆயுர்வேத டிப்ஸ்!

nathan

தினமும் தலைக்கு ஏன் ஷாம்பு போடக்கூடாது என்பதற்கான காரணங்கள்!!!

nathan

ஆளிவிதை ஜெல் செய்து யூஸ் பண்ணினா உங்கள் கூந்தல் நீளமா வளரும்! !!

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சியைப் பயன்படுத்துவது எப்படி?

nathan