தமிழ் சினிமாவின் ஒரு பகுதிக்குள் நுழைந்த பிரபலங்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்:
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி.
டிஷ்யூம், நான் அவன் இல்லை, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் இசையமைத்து வந்த அவர் காதலில் விழுந்தேன் படத்தின் பாடல்கள் மூலம் பெரிய ரீச் பெற்றார்.
பின் முக்கிய வேடத்தில் நடித்த பிறகு, சலீம், இந்தியா பாகிஸ்தான், எமன், சைத்தான், பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2 போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார்.
விஜய் ஆண்டனிக்கு சென்னையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள ஒரு பங்களாவும், பெங்களூரில் ரூ. 3 கோடியில் ஒரு வீடும் உள்ளது.
அதேபோல் பிஎம்டபிள்யூ போன்ற விலை உயர்ந்த சொகுசு கார்களை வைத்திருக்கும் விஜய் ஆண்டனியின் மதிப்பு ரூ. 55 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.