30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
இந்த உணவுப் பொருட்கள் முகப்பருக்களை உண்டாக்கும் என்பது தெரியுமா?
முகப்பரு

இந்த உணவுப் பொருட்கள் முகப்பருக்களை உண்டாக்கும் என்பது தெரியுமா?

சிலருக்கு திடீரென்று முகப்பரு வரும். இப்படி முகப்பரு வருவதற்கான காரணம் கேட்டால், உணவுகளைக் குறை கூறுவார்கள். உண்மையிலேயே உணவுகள் முகப்பருக்களுக்கு காரணமாக இருக்குமா? இல்லை இது வெறும் கட்டுக்கதையா?

பொதுவாக சருமம் சருமத்துளைகள் மற்றும் மயிர்கால்களால் சூழப்பட்டிருக்கும். எனவே எண்ணெய், இறந்த செல்கள், பாக்டீரியா போன்றவை இந்த சருமத்துளைகளில் நுழைந்து முகப்பருக்களை உண்டாக்கும். ஆனால் உடலினுள் செல்லும் உணவுகள் எப்படி முகப்பருக்களை உண்டாக்கும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழும்.

மேற்கத்திய நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் 79-95 சதவீதம் முகப்பருவிற்கு உணவுகளும் முக்கிய காரணியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சரி, எந்த உணவுகள் எல்லாம் முகப்பருவை உண்டாக்கும் என்று பார்ப்போம்.

சோடா

சோடா மற்றும் குளிர் பானங்களில் சர்க்கரை அதிகம் இருக்கும். இதனைப் பருகும் போது, அதில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து, இன்சுலின் அளவையும் அதிகரிக்கும். இதன் காரணமாக சரும வறட்சி ஏற்படுவதோடு, சருமத்துளைகள் அடைக்கப்பட்டு பருக்கள் வரும்.

பால்

ஆம், பால் பொருட்கள் அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், அதில் உள்ள கொழுப்புக்கள் முகப்பருக்கள் அதிகம் வர காரணமாகும் என சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சாக்லேட்

சாக்லேட்டும் சிலருக்கு முகப்பருக்களை உண்டாக்கும். இதற்கு அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை தான். வேண்டுமானால், டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள். இதில் சர்க்கரையும், பாலும் குறைவாக இருக்கும்.

பிட்சா

சிலருக்கு பிட்சா சாப்பிட்டால் பிம்பிள் வரும். இதற்கு காரணம் பிட்சாவில் சேர்க்கப்பட்டு அதிகமாக பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை பொருட்கள் தான். எனவே பிட்சா சாப்பிட விருப்பம் இருந்தால், அளவான சீஸ் மற்றும் நற்பதமான காய்கறிகள் பயன்படுத்தப்பட்ட பிட்சாவை சாப்பிடுங்கள்.

வறுத்த உணவுகள்

நிறைய பேர் எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை உட்கொண்ட அன்றிரவே முகப்பருவை சந்திப்பார்கள். இதுவும் உண்மை தான். எனவே இதனை தவிர்க்க பொரித்த உணவுகள் உட்கொள்வதைத் தவிர்ப்பதோடு, தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டால் முகப்பரு வருவதற்கு காரணம், அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் தான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முட்டையின் மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதால், அதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், சிலருக்கு முகப்பரு வரும். குறிப்பாக எண்ணெய் பசை சருமத்தினருக்கு இம்மாதிரியான நிலை அதிகம் வரும்.

Related posts

உடலில் பருவால் உண்டான தழும்பை போக்கும் வழிகள்

nathan

பளிங்கு முகத்தில் பருக்கள் வர காரணம் என்ன?

nathan

பிம்பிள் பிரச்சனை… சிம்பிள் தீர்வுகள்!

nathan

பிம்பிளைப் போக்க மக்கள் பின்பற்றும் சில அசாதாரண வழிகள்!

nathan

அளவுக்கதிகமான பருத் தொல்லைக்கு.

nathan

ஒரே இரவில் பிம்பிளைப் போக்க வேண்டுமா? அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.

nathan

ஐந்து நாட்களில் முகத்தில் உள்ள பருக்களை மறைப்பது எப்படி?

nathan

இயற்கையான முறையையில் கரும்புள்ளிகளை போக்க……

sangika

பருக்கள் விட்டுச் சென்ற கருமையான தழும்புகளைப் போக்கும் சூப்பர் டிப்ஸ்! இத ட்ரை பண்ணி பாருங்க..

nathan