25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 6 எளிய வழிகள்!
தலைமுடி சிகிச்சை

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 6 எளிய வழிகள்!

ஒருவருக்கு அழகான தோற்றத்தைக் கொடுப்பதில் தலைமுடி முக்கிய பங்கை வகிக்கிறது. அத்தகைய தலைமுடி தற்போது பலருக்கும் அதிகமாக உதிர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆண்களுக்கு அதிகம் கொட்டுகிறது. இதனால் சொட்டை விழுந்துவிடுமோ என எண்ணி பல ஆண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்க நிறைய பணம் செலவழித்து பல சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் எந்த பலனும் கிடைக்காமல் ஏமாறுகின்றனர். ஆனால் இயற்கை பொருட்களைக் கொண்டு தலைமுடி உதிர்வதற்கு தீர்வுகளை காண நினைத்தால், நிச்சயம் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம். குறிப்பாக வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு பராமரித்து வந்தால், தலைமுடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்கலாம்.

சரி, இப்போது தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 6 எளிய வழிகளைக் காண்போம்.

வெங்காய சாறு

வெங்காயத்தில் உள்ள சல்பர் கொலாஜென் திசுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இந்த திசுக்கள் தான் முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் இந்த திசுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வெங்காயத்தைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், தலைமுடி உதிர்வதைக் குறைத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கலாம். அதற்கு 2-4 வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, வாரம் ஒருமுறை அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து 15 நிமிடம் அல்லது 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்புவால் தலைமுடியை அலச வேண்டும்.

உருளைக்கிழங்கு சாறு

உடலில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி குறைவாக இருந்தால், முடி வறட்சியுடன், முடியின் முனைகளில் வெடிப்புக்கள் ஏற்படும். உருளைக்கிழங்குகளில் இந்த வைட்டமின்கள் ஏராளமாக உள்ளது. எனவே 3-4 உருளைக்கிங்குகளை எடுத்து அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் அலசுங்கள். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டலாம்.

மற்றொரு முறை

3 உருளைக்கிழங்கை சாறு எடுத்து, ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன் சேர்த்து நன்கு கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச, முட்டையில் உள்ள சத்துக்களும் கிடைத்து, தலைமுடியின் வளர்ச்சி வேகமாகும்.

முட்டை முடி

புரோட்டீனால் ஆனது. ஆகவே முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமானால், புரோட்டீன் நிறைந்த பொருட்களால் பராமரிப்பு கொடுக்க வேண்டும். இத்தகைய புரோட்டீன் முட்டையில் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே 2 முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை பின்பற்றி வந்தால், முடிக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து தலைமுடி நன்கு வளரும்.

ஆப்பிள் சீடர்

வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரில் தலைமுடிக்கான நன்மைகள் அதிகம் உள்ளது. இது மயிர் கால்களைத் தூண்டி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது ஸ்கால்ப்பின் pH அளவை சீராகப் பராமரித்து, ஸ்கால்ப்பை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசமஅளவில் எடுத்து கலந்து, தலைக்கு ஷாம்பு போட்ட பின், இறுதியில் இக்கலவையால் தலைமுடியை அலச வேண்டும்.

வெந்தயம்

பழங்காலம் முதலாக தலைமுடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க வெந்தயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் 2-3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நீரில் 24 மணிநேரம் ஊற வைத்து, அந்த நீரால் தலைமுடியை அலசி, 3 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலசுங்கள். இப்படி தினமும் பின்பற்றி வந்தால், ஒரே மாதத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.

வெந்தயம் ஹேர் மாஸ்க்

1 டீஸ்பூன் வெந்தய பேஸ்ட்டை 1/4 கப் தேங்காய் பாலில் கலந்து, அந்த கலவையை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

நெல்லி, சீகைக்காய், பூந்திக் கொட்டை

100 கிராம் நெல்லி, 100 கிராம் சீகைக்காய், 100 கிராம் பூந்திக்கொட்டையை 2 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த கலவையை அடுப்பில் வைத்து, தண்ணீர் பாதியாக குறையும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் கையால் அந்த பொருட்களை மசித்து, அதனை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து நீரில் அலசிவிட வேண்டும். இப்படி வீட்டிலேயே ஷாம்பு செய்து குளித்து வந்தால், தலைமுடி உதிராமல் நன்கு செழித்து வளரும்.

Related posts

இந்த எண்ணெயை தினமும் யூஸ் பண்ணுனா வழுக்கை தலையிலும் முடி வளருமாம்!

nathan

முயன்று பாருங்கள் தலைமுடிகள் வேர் வேராக உதிர்வதை தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்!

nathan

உங்க நரை முடியை மீண்டும் கருகருன்னு மாத்த…சூப்பர் டிப்ஸ்

nathan

மென்மையான கூந்தலுக்கு…

nathan

ஆண்களுக்கு முடி உதிரும் பிரச்சனை அதிகரிக்க காரணமாக இருக்கும் பழக்கவழக்கங்கள்!!

nathan

சூப்பர் டிப்ஸ்! பட்டுப்போன்ற மென்மையான முடி வேண்டுமா? அப்ப கற்றாழை ஹேர் பேக் போடுங்க…

nathan

அலுமினியத்தாளை தலையில் சுற்றிக் கொள்வதால் பெறும் நன்மை பற்றி தெரியுமா?

nathan

செம்பருத்தி பூவின் மகத்தான பலன்கள்…..

nathan

கூந்தல் சிகிச்சை ஒரு எச்சரிக்கை

nathan