25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
pattani kurma 1672758928
Other News

சுவையான… பட்டாணி குருமா

தேவையான பொருட்கள்:

* பட்டாணி – 1 கப் (நீரில் 5 மணிநேரம் ஊற வைத்தது)

* பட்டை – 1 இன்ச்

* கிராம்பு – 3-4

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* சோம்பு தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்

* தேங்காய் பால் – 1/2 கப்

* உருளைக்கிழங்கு – 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)

* எண்ணெய் – தேவையான அளவு

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிதுpattani kurma 1672758928

செய்முறை:

* முதலில் ஊற வைத்த பட்டாணியை நன்கு நீரில் கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, சிறிது உப்பு போட்டு அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் தக்காளியை போட்டு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு பிரட்டி, சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

* உருளைக்கிழங்கு முக்கால்வாசி வெந்ததும், வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்து கிளறி, சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் சோம்பு பொடியை சேர்த்து, தேங்காய் பாலை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சுவையான பட்டாணி குருமா தயார்.

Related posts

முகத்தை மறைத்துக் கொண்டு முக்கிய நபரை சந்தித்த ஜோவிகா…

nathan

இளவரசி கேட் இல்லாவிட்டால் ராஜ குடும்பம் அவ்வளவுதான்…

nathan

7 முறை கட்டாய கருக்கலைப்பு! சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமி

nathan

பவதாரணியின் சிறு வயது புகைப்படங்கள்!

nathan

விமர்சனத்துக்குள்ளான பிரியா வாரியர்

nathan

டான்சர் ரமேஷ்-ன் இறுதி நிமிடங்கள்..! – தீயாய் பரவும் காட்சிகள்..!

nathan

முதல் திருமணத்தை மறைத்து ரகசிய திருமணம்… தாலியை கழட்டி வீசிய மணப்பெண்!!

nathan

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவன் சாவு

nathan

இரட்டை குழந்தைகளுக்கு தாயான ‘சந்திரலேகா’ சீரியல் நடிகை ஸ்வேதா.!

nathan