25.9 C
Chennai
Friday, Mar 13, 2026
1 coconut podi 1660217464
Other News

தேங்காய் மிளகாய் பொடி

தேவையான பொருட்கள்:

* துருவிய தேங்காய் -1 கப்

* உளுத்தம் பருப்பு – 1/4 கப்

* வரமிளகாய் – 10-15

* கடுகு – 1 டீஸ்பூன்

* பூண்டு – 3

* புளி – 1 சிறிய துண்டு

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* வெல்லம் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டீஸ்பூன்1 coconut podi 1660217464

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக நிறம் மாற ஆரம்பிக்கும் போது, கடுகு, வரமிளகாய், பூண்டு, பெருங்காயத் தூள் மற்றும் புளி சேர்த்து, மிதமான தீயில் வைத்து நன்கு பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியில் துருவிய தேங்காயை சேர்த்து குறைவான தீயில் வைத்து, அதில் உள்ள நீர் அனைத்தும் வற்றும் வரை வறுத்து இறக்கி, அதையும் குளிர வைக்க வேண்டும்.

* பின்பு வறுத்த பொருட்களுள் தேங்காயைத் தவிர அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் தேங்காய், வெல்லம் சேர்த்து, ஒருமுறை லேசாக அரைத்து இறக்கிவிட வேண்டும். (அதிகமாக அரைத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் அது பிசுபிசுவென்று மாறிவிடும்.)

* இப்போது அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறினால், தேங்காய் மிளகாய் பொடி தயார். இந்த பொடியை காற்றுப்புகாத ஜாரில் போட்டு சேமித்து வைத்து பயன்படுத்துங்கள்.

Related posts

லியோ டிக்கெட்? அதிரடி காட்டிய அமுதா ஐஏஎஸ்!

nathan

பவதாரணி இறப்பிற்கு அவர் செய்த சின்ன தவறு தான் காரணம்…

nathan

நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் டும் டும்..

nathan

மேஷ ராசி, பரணி நட்சத்திரம் பெண்

nathan

மகள் ஜோவிகாவிற்கு தந்தை ஆகாஷ் அனுப்பிய காட்சி

nathan

அரைகுறை ஆடையில் இலங்கை லாஸ்லியா

nathan

எனக்கு நீ தான் மாப்பிள்ளை.. பிரபல தமிழ் நடிகரிடம் கூறிய கீர்த்தி சுரேஷ் அம்மா..!

nathan

சூரியன் மறைந்தப் பிறகு வீடுகளில் செய்யக் கூடாதவை…!

nathan

மோசடி செய்த பிரபல வாஸ்து நிபுணர் கைது

nathan