25.5 C
Chennai
Monday, Dec 23, 2024
4howtomaketurmericfacepackforacne freeskin 04 1462357456
முகப்பரு

அழகை கெடுக்கும் முகப்பருவிலிருந்து உடனடி தீர்வுக் காண, இதை ட்ரை பண்ணுங்க!

ஈன் -ஏஜ் வயதினருக்கு வரும் முதல் பிரச்சனை முகப்பருதான். சருமத்தை தடிமனாக்கி, தழும்புகள் ஏற்படுத்தி, முகத்தையே அசிங்கமாக்குகிறது என கவலைபடுகிறீர்களா?.கவலையை விடுங்கள். முகப்பருவை அண்ட விடாமல் காக்கும் இந்த பேக்குகளை நீங்கள் உபயோகப்படுத்திப் பாருங்கள். உங்கள் முகத்தில் தழும்புகள் மறைந்து பொலிவாகும்.

மஞ்சள் சிறந்த ஆன்டி செப்டிக் மற்றும் பூஞ்சை , பேக்டீரியா ஆகிய தொற்றுகளிலிருந்து காப்பாற்றும் ஒரு பாதுகாப்பு வீராங்கனை, ஒரு அற்புதமான கிருமி நாசினி என அதன் மகிமையை சொல்லிக் கொண்டே போகலாம். சருமத்தில் கவசம் போல செயல்படுவதால்தான் அந்த காலங்களில் மஞ்சள் பூசாமல் பெண்கள் வெளியே வர மாட்டார்கள். காலப்போக்கில் நாகரீகம் கருதி மஞ்சளை நாம் உபயோப்படுத்துவதில்லை.

இனி விஷயத்திற்கு வருவோம். மஞ்சளுடன் வேறு சில பொருட்களையும் சேர்த்து செய்யும் இந்த பேக் மிகவும் அருமையானதாகும். என்னென்னபொருட்கள் கலப்பது எனப் பார்க்கலாம்.

யோகார்ட்:

யோகார்ட் லாக்டிக் அமிலத்தைக் கொண்டுள்ளது. அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றுகிறது. அமில-காரத் தன்மையை சமன் செய்கிறது.

கடலை மாவு :

கடலை மாவு சருமத்தில் வடியும் அதிக எண்ணெயை உறிஞ்சுகிறது. முகப்பரு உடைய எளிதாக்குகிறது.

வேப்பிலை :

மஞ்சளைப் போன்றே வேப்பிலையும் மிக மிக அருமையான செயல்களைக் கொண்டுள்ளது. வேப்பிலையை தினமும் அரைத்து பயன்படுதினால் சருமம் மிக மிருதுவாகும். அது ஆன்டி செப்டிக், ஒரு கிருமி நாசினி.

2013 ஆம் ஆண்டு Asian Pacific Journal of Tropical Biomedicine என்ற இதழ் வேப்பிலையின் மகத்துவத்தை பற்றி ஆய்வு செய்து ஆய்வினை வெளியிட்டுள்ளது.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லதாகும். அதிலிருக்கும் சிட்ரிக் அமிலம் பருக்களை காய்ந்து போகக் செய்கிறது.எண்ணெய் வடிவதை தடுக்கிறது.வறண்ட சருமம் இருப்பவர்கள் சேர்க்க வேண்டாம்.

மஞ்சள் -யோகார்ட் பேக் செய்வது எப்படி?

தேவையானவை :

மஞ்சள் -1 ஸ்பூன் அளவு யோகார்ட் – 2-3 ஸ்பூன் கடலை மாவு – 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு( தேவைப்பட்டால் உபயோகிக்கவும்).

ஒரு கிண்ணத்தில் யோகார்டை எடுத்துக் கொள்ளவும். அதில் கடலைமாவினை கெட்டிப் படாமால் நன்றாக கலந்து, பின் மஞ்சளை இறுதியாக சேர்க்க வேண்டும். எலுமிச்சை சாற்றினை விருப்பமிருந்தால் சேர்க்கவும். இப்போது இந்த பேக் ரெடி. இதனை பிரஷ் கொண்டு முகத்தில் போடவும். முழுவதும் காய்ந்த பின்,கைகளால் மெதுவாய் தேய்த்து கழுவவும்.

மஞ்சள்-வேப்பிலை பேக் செய்யும் முறை :

மஞ்சள் -1-2 ஸ்பூன் அளவு யோகார்ட் -1 டேவிள் ஸ்பூன் வேப்பிலை :-1 டேபிள் ஸ்பூன். எலுமிச்சை சாறு :- சிறிதளவு

செய்முறை :

வேப்பிலையை வாணிலியில் மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும். பின் அதனை மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். இப்போது வேப்பிலை பொடியுடன், மஞ்சள் யோகார்ட் சேர்த்து நன்றாக கலக்கவும். பின் எலுமிச்சை சாற்றினை கலந்து பேக்கை ரெடி செய்து கொள்ளவும். இந்த பேக்கை பிரஷ் கொண்டு முகத்தில் போடவும். நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரினால் கழுவவும்.

மேலும் சில புதுவான குறிப்புகள்:

இந்த பேக்குகளை போடுவதற்கு முன் முகத்தில் க்ரீம் ,மேக்கப் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். யோகார்ட் கிடைக்கவில்லையென்றால் பால் பயன்படுத்திக் கொள்ளலாம். முகத்தில் காயங்கள் இருந்தால் இந்த பேக்கில் எலுமிச்சை சாற்றினை சேர்க்க வேண்டாம். அதற்கு பதிலாக ரோஸ் வாட்டரை சேர்க்கலாம். இந்த மஞ்சள் பேக் போடும்போது, முகத்தில் மஞ்சள் அப்பிவிடும். அப்படியே வெளியே போக முடியாது. அதனால் பால் கொஞ்சம் முகத்தில் தேய்த்து 5 நிமிடங்கள் காய விடவும்.பிறகு முகம் கழுவினால் மஞ்சள் நிறம் போய்விடும்.

இந்த பேக்குகளில் ஏதாவது ஒன்றினை வாரம் இரு முறை போட்டால், முகப்பரு தொல்லை இனி இருக்காது. உங்கள் முகம் பளபளப்பாய், மாசு மருவின்றி ஜொலிப்பதை நீங்கள் பார்த்து பூரிப்பீர்கள்
4howtomaketurmericfacepackforacne freeskin 04 1462357456

Related posts

ஐந்து நாட்களில் முகத்தில் உள்ள பருக்களை மறைப்பது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா நெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்

nathan

முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் விளாம்பழ ஃபேஷ் பேக்

nathan

பருக்கள் மறைய மஞ்சள் சிகிச்சை…

nathan

பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை

nathan

மருக்கள் மறைய முகம் பொழிவு பெற

nathan

பருக்களை நீக்கும் அழகு சாதனங்கள்

nathan

முகப்பருக்களை தடுக்க, குணப்படுத்த என்னென்னவோ செய்தாலும் தீர்வு இல்லையா?

sangika

beauty tips .. முகப்பரு தழும்புகள் நீக்கும் முறைகள்

nathan