yqlsMjcQ6b
Other News

கணவரைப் பிரிந்தார் ராஜ்கிரண் மகள்!மன்னித்துவிடுங்கள் அப்பா..

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா, நடிகர் சண்முகராஜாவின் தம்பி முனீஸ் ராஜாவை 2022ல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு ராஜ்கிரண் குடும்பத்தினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் முனித்ராஜாவும், பிரியாவும் காவல் நிலையம் செல்ல நேரிட்டது. திருமணத்திற்குப் பிறகு, நேர்காணல் செய்த பலர் காதல் மற்றும் முடிவுகளைப் பற்றி பேசினர். முனீஸ் ராஜா நாதஸ்வரம், முள்ளும் மலரும் ஆகிய நாடகத் தொடர்களில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரியா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “ எனக்கும் முனீஸ் ராஜாவுக்கும் கடந்த 2022ம் ஆண்டு ஊடகங்கள் மூலம் திருமணம் நடந்தது.இப்போது சில மாதங்களாக பிரிந்து வாழ்கிறோம்.எங்கள் திருமணம் சட்டப்படி செல்லாது என்று கூற விரும்புகிறேன்.இந்த திருமணத்திற்கு பிறகு. , என் அப்பாவை வளர்த்ததால நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.ஆனா எனக்கு ஒரு பிரச்சனை வந்த போது என்னைக் காப்பாற்றினார்கள்.அப்பாவிடம் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் போதாது.

yqlsMjcQ6b

வளர்ப்பு மகளான பிரியாவின் திருமணம் நடந்தபோது நடிகர் ராஜ்கிரண் முகநூலில் விளக்கமளித்திருந்தார்.

அதில்,

என் மகளை ஒரு தொலைக்காட்சி தொடர் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. என் மீது அபிமானம் கொண்டுள்ள அனைவருக்கும் உண்மையை விளக்க வேண்டியது என் கடமை. எனக்கு திப்பு சுல்தான் நைனார் முஹம்மது என்ற ஒரே ஒரு மகனைத் தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது. இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை ”வளர்ப்பு மகள்” என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன். முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட தொலைக்காட்சி நடிகர், என்னென்ன முறையிலோ அந்தப் பெண்ணை தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இந்த விஷயம் என் காதுக்கு வந்ததும், அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில், எனக்கு இருக்கும் நல்ல பெயரைப் பயன்படுத்தி, திரைப்படத் துறையில் வாய்ப்புகளைப் பெறுவதும், என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள். இதையெல்லாம் பலவிதமாக
விசாரித்து தெரிந்து கொண்ட நான், என் வளர்ப்புப் பெண்ணிடம் சொன்னேன். அவர் காதில், நான் சொன்னது எதுவும் ஏறவில்லை. அவரைத்தான் கட்டிக்கொள்வேன் என்றும், உங்கள் பெண் என்று நானோ, அவரோ வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டோம் என்றும் அந்தப்பெண் சொல்லியிருந்தார்.

இதையும் படிக்க: ‘இந்த வெற்றி கண்ணீரைத் துடைத்திருக்கிறது..’: சாந்தனு உருக்கம்

அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று என் மனைவி, அந்தப் பெண்ணிடம் அழுது மன்றாடி, மடிப்பிச்சை கேட்டு, ஒரு வழியாக, ”சரி, இவர் வேண்டாம், உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள்” என்று சொல்ல, நாங்களும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தோம்.

இந்தச் சூழ்நிலையில்தான், என் மனைவியின் தோழியான லட்சுமி பார்வதியைப் பார்த்துவிட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு, இந்தப் பெண் ஆந்திரா போய் நான்கு மாதங்களாகி விட்டன, இன்னும் எங்கள் வீட்டுக்குத் திரும்பவில்லை. இந்த நிலையில்தான், இப்படி ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்த விஷயத்தில் நான் கோபப்பட்டபோது கூட, என்னைச் சமாதானப்படுத்தி, அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து பேசி இன்று வரை அந்தப் பெண்ணுக்கு
உறுதுணையாக நிற்பது என் மனைவி மட்டும் தான்.

என் வளர்ப்புப் பெண், ஒரு தரமான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாகக் கட்டிக்கொடுத்திருப்பேன். ஆனால், தன் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டாளே என்பது மட்டுமே என் வருத்தம்.

இதன் மூலம் நான் எல்லோரிடமும் சொல்லிக்கொள்வது, என்னவென்றால், என் பெயரைப் பயன்படுத்தி இவர்கள் உங்களை எந்த வகையிலாவது அணுகினால், அதனால் ஏற்படும் எந்தப் பிரச்னைக்கும் நான் பொறுப்பல்ல என்பது தான்.

இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காகப் பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்தத் தொலைக்காட்சி நடிகர், என் வளர்ப்புப் பெண்ணிற்குக் கணவனாகிக் கொள்ளக்கூடும். ஆனால், எந்தக் காலத்திலும் எனக்கு மருமகனாக முடியாது.

இன்றிலிருந்து, இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நேர்மையும், சத்தியமுமே என்றும் வெல்லும் எனப் பதிவிட்டிருந்தார்.

Related posts

மாயா என்ன ஜென்மம், ரொம்ப சீப்பான ஆளு – விக்ரம் எலிமினேஷன்

nathan

கணவருடன் சுற்றுலா சென்ற நடிகை குஷ்பு

nathan

ஹைதராபாத் பிரியாணி மசாலா பொடி

nathan

என்ன கண்றாவி இதெல்லாம்…? சட்டை பட்டனை போ டாமல் அது தெரியும்ப டி மோ சமான புகைப்படத்தை வெ ளியிட்ட தாஜ்மஹால் பட நடிகை..!

nathan

மீண்டும் தன் மகனிடம் அடைக்கலம் ஆன பப்லு…!கைவிட்டு சென்ற காதல்…

nathan

நாள்தோறும் செயற்கைக்கோள் ஏவும் நிலை வரும் – விஞ்ஞானி மயில்சாமி

nathan

‘காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி’ – நடிகர் ரஜினிகாந்த்

nathan

60 வயதில் 9 வது குழந்தை பெற்ற முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்!

nathan

அபிராமியின் செம்ம கியூட்டான லேட்டஸ்ட் கிளிக்ஸ்

nathan