25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
முகப் பராமரிப்பு

உங்க முகத்தில் மேடு பள்ளம் அதிகமா இருக்கா? அதை மறைக்க சில டிப்ஸ்…

சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்களாக இருக்கும். இப்படி மேடு பள்ளமான சருமத்தைக் கொண்டவர்களின் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதோடு, அவர்களின் முகமே அசிங்கமாக காணப்படும். இதனால் பல நேரங்களில் இத்தகைய முகத்தைக் கொண்டவர்கள் அசௌகரியத்தை உணர்வார்கள்.

ஆனால் இப்படி திறந்துள்ள சருமத் துளைகளை ஒருசில செயல்களின் மூலம் மறையச் செய்யலாம். இங்கு முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைப்பதற்கான சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், சருமத் துளைகளை மறைக்கலாம்.

ஐஸ்கட்டி மசாஜ்

ஐஸ் கட்டிகளைக் கொண்டு தினமும 10 நிமிடம் மசாஜ் செய்தால், சரும செல்கள் குளிர்ச்சியடைவதோடு, சருமத்துளைகளும் சுருங்க ஆரம்பிக்கும்.

தயிர்

தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் மற்றும் லாக்டிக் அமிலம், சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். அதற்கு தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறுவதோடு, சருமத்துளைகளும் சுருங்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா சருமத்தின் pH அளவை சீராக பராமரித்து, சருமத் துளைகளை சுருங்கச் செய்யும். அதற்கு ஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத் துளைகளும் சுருங்கும்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, சருமத்துளைகள் சுருங்கும்.

ஆப்பிள் சீடர்

வினிகர் ஆப்பிள் சீடர் வினிகர் கூட சருமத் துளைகளை மூட உதவும். அதற்கு அதனை சிறிது நீரில் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் பொலிவும் மேம்படும்.

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காயை சாப்பிடுவதுடன், அதன் சாற்றினை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத் துளைகள் சுருங்க ஆரம்பிக்கும்.

களிமண் மாஸ்க்

களிமண் மாஸ்க்கை போட்டால், சருமத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்பது தெரியுமா? குறிப்பாக களிமண் மாஸ்க் சருமத் துளைகளில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் உறிஞ்சி வெளியேற்றி, சருமத்துளைகளை சுருங்கச் செய்யும். அதற்கு ஒரு பௌலில் களிமண்ணை போட்டு, அதனை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை

உங்கள் முகத்தில் மேடு பள்ளங்களுடன், கரும்புள்ளிகளும் இருந்தால், எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் விரைவில் மறையும்.

Related posts

ஒரே நாளில் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பிரகாசமாக்கும் ஃபேஸ் பேக்குகள்!

nathan

உருளைக்கிழங்கு சாறு கரும் புள்ளிகள் மற்றும் தோல் தொடர்பான பல பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.

nathan

ஃபேஸ் மாஸ்க் போடும் முன் கவனிக்க வேண்டியவை

nathan

சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவுக்கு குங்குமப் பூ!….

sangika

சோப் போட்டு குளித்தால் முகம் வறண்டு போகிறதா

nathan

பீல் ஆஃப் மாஸ்க் வீட்டிலேயே செய்ய ட்ரை பண்ணியிருக்கீங்களா? இப்ப ட்ரை பண்ணுங்க ஈஸியா

nathan

வெயில் கொடுமை தாங்கமுடியலையா? அப்ப இத படிங்க!

nathan

மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்:

nathan

நீண்ட நாட்கள் இளமையாக இருக்கணுமா..?அப்ப இத படிங்க!

nathan