வில்லன்கள், ஹீரோக்கள், நகைச்சுவை நடிகர்கள் என அனைத்து விதமான வேடங்களிலும் நடித்து மக்களைக் கவர்ந்த நடிகர் லிவிங்ஸ்டன்.
ஆரம்ப காலத்தில் வில்லனாக நடித்தாலும்சுந்தர புருஷன், சொல்லாமலே, என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற படங்களில் ஹீரோவானார்.
லிவிங்ஸ்டன் 1997 இல் ஜசிந்தாவை மணந்தார். தம்பதியருக்கு ஜோவிடா மற்றும் ஜெம்மா என இரு மகள்கள் உள்ளனர்.
அவரது மூத்த மகள் ஜோவிதா, சன் டிவியின் நாடகத் தொடரான பூவே உனக்காக திரையுலகில் அறிமுகமானார். இவர் தற்போது அருவி சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.