25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
Hair Care Tips at Home 1
தலைமுடி சிகிச்சை

ஒரே வாரத்தில் முடி உதிர்வதைத் தடுக்க தலைக்கு பூண்டு யூஸ் பண்ணுங்க…

உங்களுக்கு முடி அதிகம் கொட்டுதா? முடி உதிர்வதைத் தடுக்கும் எந்த எண்ணெயைப் பயன்படுத்தினாலும் தீர்வு கிடைக்கவில்லையா? அப்படியெனில் இயற்கை வழிகளை முயற்சித்துப் பாருங்கள். அதிலும் சமையலறையில் உள்ள வெங்காயம், பூண்டு போன்றவற்றைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், நிச்சயம் முடி உதிர்வதைக் குறைத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

மேலும் நிபுணர்களும் பூண்டு சாறு தலைமுடி உதிர்வதைக் குறைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். சரி, பூண்டு சாற்றினை எப்படி தலைக்கு பயன்படுத்துவது, எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பூண்டு சாற்றினைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக காண்போம்.

பூண்டு சாற்றினை தயாரிப்பது எப்படி?

முழு பூண்டு மூன்றினை எடுத்து, பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, அவற்றில் இருந்து சாறு எடுத்து, காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி, தேவையான போது எடுத்துப் பயன்படுத்தலாம்.

பூண்டு சாற்றினை பயன்படுத்தும் முன்…

உங்கள் ஸ்கால்ப்பில் ஏதேனும் காயங்கள் இருந்தால், பூண்டு சாற்றினைப் பயன்படுத்த வேண்டாத்ம. ஏனெனில் அதில் உள்ள அமிலம் காயங்களை மேலும் மோசமாக்கும். உங்களுக்கு வறட்சியான முடி என்றால், 1/2 மணிநேரத்திற்கு முன் ரோஸ் வாட்டரை தலையில் தடவி மசாஜ் செய்து ஊற வைக்க வேண்டும். இதனால் பூண்டு சாற்றினை தலைக்கு பயன்படுத்திய பின் முடி சிக்காவதைத் தடுக்கலாம்.

பூண்டு சாற்றினைப் பயன்படுத்திய பின்…

பூண்டு சாற்றினை தலையில் பயன்படுத்திய பின், 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சீப்பு கொண்டு மென்மையாக முடியில் உள்ள சிக்கை நீக்கி, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். பிறகு மைல்டு ஷாம்பு போட்டு தலைமுடியை அலசி, 15 நிமிடம் கழித்து முடிக்கு கண்டிஷனர் தடவி குளிர்ந்த நீரில்

எத்தனை நாளுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம்?

வாரத்திற்கு ஒருமுறைக்கு மேல் இந்த சாற்றினை பயன்படுத்தக் கூடாது. இப்படி ஒரு மாதத்திற்கு 2 முறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்திருப்பதை நன்கு காணலாம்.

பூண்டு சாறு முடி வளர்ச்சிக்கு எப்படி உதவுகிறது?

பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் சேர்மம் உள்ளது. இந்த சேர்மம் இரத்த ஓட்டத்தை ஸ்கால்ப்பில் அதிகரித்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் பூண்டில் உள்ள காப்பர் முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும், புதிய முடி வளரவும் செய்யும்.hair tips 1

Related posts

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…உங்கள் முன் தலையில் ஏற்படும் வழுக்கையை சரிசெய்வதற்கான சில வழிகள் இதோ!

nathan

உங்களுக்கு தெரியுமா சீயக்காய் பொடியை எவ்வாறு வீட்டிலேயே தயாரிப்பது…!

nathan

பெண்களே முடி நன்கு அடர்த்தியாக வளர வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

தலையில் ஏற்படும் அதிக அரிப்பை குறைக்க இத முயற்சி பண்ணுங்க!

nathan

பளபளப்பான மற்றும் வலிமையான கூந்தலை பெற

nathan

உங்கள் கூந்தலைக் காப்பாற்றும் சமையல் சோடா ஷாம்பூவை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

nathan

ஒல்லியான முடியை அடர்த்தியாக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

nathan

பெண்கள் மண்டையில் கொண்டை போடுவது ஏன் தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

உங்க முடி வேரோட கொட்டுதா? இதோ அற்புதமான சில டிப்ஸ்

nathan