என்னென்ன தேவை?
சுண்டைக்காய்(வத்தல்) -100கிராம்
வாழைக்காய் -1
சின்னவெங்காயம் -100கிராம்
பச்சைமிளகாய் -1
பூண்டு -10பல்
புளி கரைசல் -1/2 கப்
தேங்காய் பால் -1/2 கப்
கடுகு -1/4 ஸ்பூன்
வெந்தயம் -1/4ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -1ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படி செய்வது?
கடாயில் எண்ணெய் ஊற்றி வாழைக்காயை வதக்கி வைத்துக்கொள்ளவும்.. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து கிளறி வதக்கி வைத்துள்ள வாழைக்காயை இதில் கலந்து கிளறவும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து கொதிக்கவிட்டு அதில் சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து போதுமான அளவு உப்பு கலந்து கொள்ளவும். பின்னர் சுண்டைக்காய் வத்தல் கலந்து சுண்டைக்காயை 5 நிமிடங்கள் கொதிகவிட்டு தயார் செய்து வைத்துள்ள தேங்காய் பாலை கலந்து இறக்கினால் சுவையான சுண்டைக்காய் குழம்பு தயார்.