சீனப் பெருஞ்சுவரில் உலகின் மிக நீளமான சுவரோவியத்தை வரைந்து பெண் கலைஞர் உலக சாதனை படைத்துள்ளார்.
சீன பெண் ஓவியர் குவோ ஃபெங் உலக சாதனை வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
உலகப் பாரம்பரியச் சின்னமான சீனப் பெருஞ்சுவர், உலகின் ஏழு அதிசயங்களில் முதன்மையானது.
சீனப் பெருஞ்சுவர் நீண்ட காலமாக சீனாவின் மலைகளுக்கு இடையில் கட்டப்பட்டது, மேலும் இது சீனாவின் மீதான வெளிநாட்டு படையெடுப்புகளுக்கு எதிராக தற்காப்பு நோக்கத்திற்காக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் கட்டுமானப் பணிகள் கி.மு 3ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இதன் நீளம் தற்போது 21,190 கி.மீ.
இந்நிலையில், குவோ ஃபெங் 60 நாட்களுக்கும் மேலாக சீனப் பெருஞ்சுவரில் அமர்ந்து 1014 மீட்டர் நீளமுள்ள கேன்வாஸில் ஓவியம் வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.