25 C
Chennai
Wednesday, Dec 25, 2024
201604290755419712 heel cracks reason SECVPF
கால்கள் பராமரிப்பு

குதிகால் வெடிப்பு ஏற்பட காரணம்

கால்களின் அழகை கெடுக்கும் வகையில் வருவது தான் குதிகால் வெடிப்பு.

குதிகால் வெடிப்பு ஏற்பட காரணம்
கால்களின் அழகை கெடுக்கும் வகையில் வருவது தான் குதிகால் வெடிப்பு. வறட்சி மட்டுமின்றி, வேறுசில காரணங்களும் குதிகால் வெடிப்பை ஏற்படுத்தும். குதிகால் வெடிப்பு ஒருவருக்கு இருந்து, அதனை சரியாக கவனிக்காமல் விட்டால், அதனால் கடுமையான குதிகால் வலியை சந்திப்பதோடு, சில நேரங்களில் முற்றிய நிலையில் ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது என்பதை தெரிந்து கொண்டால், பிற்காலத்தில் குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கலாம். பாதங்கள் வெளியில் அதிகம் தெரிவதால், பாதங்களில் உள்ள ஈரப்பசை விரைவில் போய், வறட்சியை ஏற்படுத்தி, வெடிப்பை ஏற்படுத்துகிறது. உடல் எடை அளவுக்கு அதிகம் இருந்தாலும், குதிகால் வெடிப்பு வரும்.

இதற்கு காரணம், அளவுக்கு அதிகமான அழுத்தத்தை பாதங்களுக்கு கொடுப்பதால், பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. எனவே குதிகால் வெடிப்பைத் தடுக்க, உடல் எடையை குறைக்க வேண்டியதும் அவசியம். நீரிலேயே நீண்ட நேரம் இருந்தால், அதனால் கால்கள் அதிகம் நீரில் ஊறி, சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்ப்பசை அனைத்தும் வெளியேறிவிடும்.

இதன் காரணமாக குதிகால்களில் வெடிப்புகள் ஏற்படும். துணி துவைப்பவர்களின் பாதங்களில் வெடிப்புக்கள் அதிகம் இருப்பதற்கு இது தான் காரணம். காலணி அணியாமல் வெறும் காலிலேயே எப்போதும் சுற்றினால், பாதங்களில் வறட்சியுடன், கிருமிகளும் நுழைந்து, வெடிப்புக்களை மேலும் பெரிதாக்கி, நிலையை மோசமாக்கிவிடும்.

ஆகவே எங்கு சென்றாலும் காலணி அணிந்து செல்லுங்கள். வெளியில் சென்று வந்தவுடன் கால் பாதங்களை நன்றாக கழுவுங்கள். வறட்சியான சருமத்தினர், தண்ணீர் அதிகம் குடிப்பதோடு, தினமும் மாய்ஸ்சுரைசர் எனப்படும் கிரீம் அல்லது தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது. இது கால் பாதத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கும்.
201604290755419712 heel cracks reason SECVPF

Related posts

கால்களுக்கான பராமரிப்பு!

nathan

பித்த வெடிப்பு அசிங்கமா தெரியுதா? இப்படி செஞ்சு பாருங்க!!

nathan

பெண்களே உங்கள் தொடையில் அதிகபடியான சதை இருக்கிறதா?அப்ப இத படிங்க!

nathan

ஹை ஹீல்ஸ் அழகா? ஆபத்தா?

nathan

கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை

nathan

அழகான பாதத்திற்கு

nathan

நகங்கள் அழகாக எளிய வீட்டுக் குறிப்பு!….

sangika

ஒரே வாரத்தில் பாதங்களில் உள்ள வெடிப்பைப் போக்குவதற்கான சில வழிகள்!

nathan

பித்த வெடிப்பா கவலையை விடுங்கள்..!

nathan