23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
Other News

கேமியோ ரோலில் நடிக்க ரெடி” – ராகவா லாரன்ஸ் பகிர்வு

மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க தயார் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் விஜயகாந்த் இல்லத்துக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: நேற்று முன்தினம் விஜயகாந்த் சமாதிக்கு சென்றேன். அங்கிருந்து அவர் வீட்டுக்குச் சென்றோம். பேசும் போது விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை சுட்டிக் காட்டி “அண்ணன் ஹீரோவாக நடிக்கிறார்” என்றார். அவரை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று விஜயகாந்தின் சகோதரி என்னிடம் கூறினார். அந்த வார்த்தைகள் என் மனதில் ஒரு மாதிரியை உருவாக்கியது. விஜயகாந்த் பல நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு உதவி செய்துள்ளார். பல கெஸ்ட் ரோல்களில் நடித்துள்ளார்.

அதனால் எனக்கு இவ்வளவு உதவி செய்தவரின் குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். சண்முக பாண்டியன் படம் வெளியாகும் போது படத்திற்கு நல்ல ஓப்பனிங் கொடுக்க வேண்டியது அவசியம். அதை பிரபலப்படுத்த வேண்டும். அதைச் செய்ய நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதுமட்டுமின்றி, படக்குழு ஒப்புக்கொண்டால், சண்டைக்காட்சியாக இருந்தாலும் சரி, பாடலாக இருந்தாலும் சரி படத்தில் ஒரு கேமியோவில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளேன்.

சண்முக பாண்டியன் மாதிரி டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தாலும் நானும் சேர்ந்து நடிச்சாலும் அவருடன்தான் நடிப்பேன். திரு.விஜய பிரபாகரன் அரசியலுக்கு வர வாழ்த்துகள்” என்று லாரன்ஸ் கூறியுள்ளார்.

Related posts

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கன்னிச்சாமியாக சென்ற 100 வயது மூதாட்டி!

nathan

ஸ்ரீ தேவியின் அழகிய புகைப்படங்கள்

nathan

திரும்பிப் பார்க்க வைத்த பாட்டி!!71 வயதில் இப்படி ஒரு சாதனை?

nathan

கசிந்த ஜெயிலர் பட காட்சிகள் ; டிரெண்டாகும் தமன்னா வெளியிட்ட வீடியோ

nathan

நடிகை ராதாவின் மகனை பார்த்துள்ளீர்களா..

nathan

கையில் நீளமாக முடி வளர்த்து கின்னஸ் சாதனை

nathan

குருவின் நட்சத்திரத்தில் புதன் பிரவேசம்..

nathan

சொந்தமாக தனி விமானம் வைத்திருக்கும் பிரபலங்கள்..

nathan

வீட்டில் வளர்க்க கூடாத மரம்

nathan