22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
3325835123
Other News

மறுமணம் – மீனா வௌியிட்ட அறிவிப்பு!

பெண்கள் மட்டும்தான் இதுபோன்ற வேதனையை எதிர்கொள்வதாக நடிகை மீனா வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழில் ரஜினி, கமல், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை மீனா. அவரது குழந்தையும் விஜயுடன் ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

மீனாவும் தனது வயதுக்கேற்றாற் போன்ற கதாபாத்திரங்களிலும் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான், மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா பாதிப்பு வந்து உடல்நலக் குறைவானார். பின்பு அவர் குணமாகி வீடு திரும்பினாலும் பின்பு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக தன்னுடைய 48வது வயதில் கடந்த 2022ல் காலமானார்.

இவரது மறைவுக்கு புறா எச்சம் காரணமாக சொல்லப்பட்டது.

மீனாவின் கணவர் மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. சிறுவயதிலேயே மீனாவின் கணவர் இறந்துவிட்டார் எனப் பலரும் மீனாவுக்கு ஆறுதல் கூறினர். கணவர் மறைவுக்குப் பின் மீனாவின் நட்பு வட்டாரம் அவருக்கு ஆறுதலாக இருந்தது. மீனாவும் மெல்ல மெல்ல தனது கணவர் மறைவு தந்த சோகத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறார். இதுபோன்ற நிலையில்தான், மீனா மறுமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

இதுகுறித்து மீனா மறுத்த போதும், தொடர்ந்து இந்த செய்தி அவரைத் துரத்திய வண்ணமே உள்ளது. இதற்குத்தான் மீனா இப்போது பதிலளித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் அவர் பேசியிருப்பதாவது, “என்னுடைய கணவர் இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிடுச்சு. இன்று வரை அவரது இறப்பை ஈடு செய்ய முடியவில்லை. ஆனால், அதற்குள் மறுமணம் குறித்த பேச்சு வந்திருக்கிறது. ஒரு ஹீரோ தனியாக இருந்தால் அவர் குறித்து இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதில்லை. இதுவே, ஒரு ஹீரோயின் தனியாக இருந்தால் இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்து வெளியாகிறது. ஹீரோயின் என்றில்லை. பொதுவாக, பெண்கள்தான் இதுபோன்ற வேதனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இது என்னை மட்டுமில்லாமல் என்னுடைய குடும்பத்தினரையும் பாதிக்கிறது. இப்போதுவரை, என்னுடைய மறுமணம் குறித்து நான் யோசிக்கவில்லை” என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

Related posts

இந்த சகுனங்கள் போதும்..பணக்காரர் ஆயிடுவீங்க! பணம் கொட்டும்.!!

nathan

ரூ.2,000 நோட்டுகள் உங்கள் கையில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

nathan

கற்றாழை தீமைகள் -அளவுக்கு மிஞ்சிய Aloe Vera கல்லீரலை பாதிக்கும்!

nathan

மலேசியா முருகன் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

nathan

சனி ஆரம்பம்.. இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டும்

nathan

ஆண்மை இல்லையா என எழுதிய பத்திரிகை..பழிவாங்க அஜித் செய்தது என்ன?

nathan

சிறுமிகளின் உயிரை பறித்த கொசு விரட்டி..

nathan

அடேங்கப்பா! யாழ்ப்பாண தமிழில் பேசும் கணவருக்கு கொஞ்சு தமிழில் பதில் கொடுக்கும் ரம்பா!

nathan

பிக் பாஸ் ஜி.பி.முத்து கதறல் – முழு விவரம் இதோ

nathan