27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
0hcfdPK
முகப் பராமரிப்பு

ரெடிமேட் கொலாஜன் மாஸ்க்

என்னுடைய தோழி தானாகவே வீட்டில் ரெடிமேட் கொலாஜன் மாஸ்க் வாங்கி முகத்துக்கு உபயோகிக்கிறாள். அது முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும் என்கிறாள். கொலாஜன் ஷீட் பற்றி மேலும் தகவல்கள் சொல்ல முடியுமா?

அழகுக்கலை நிபுணர் மேனகாகொலாஜன் மாஸ்க் மற்றும் கண்களுக்கான பேடுகள் பியூட்டி பார்லர்களில் அழகுக்கலை நிபுணர்களால் பயன்படுத்தப்படுபவை. இந்த மாஸ்க்குகள் மெல்லிய பேப்பர் மாதிரி இருக்கும். கெமிக்கலோ, கலரோ, வாசனையோ சேர்க்கப்பட்டிருக்காது. முகத்தில் போட ஏதுவாக கண்கள், மூக்கு மற்றும் வாய்ப்பகுதிகளில் இடைவெளி விடப்பட்டிருக்கும்.

அதை முகத்தில் வைத்து, லேசாக ஈரப்படுத்தினால், அது மென்மையான ஜெல் போல மாறி, அப்படியே முகத்தில் படியும். மற்ற மாஸ்க்குகள் போல இது சுருங்கிப் போகவோ, கிழியவோ வாய்ப்பில்லை. சிறிது நேரத்தில் அந்த ஜெல் முழுவதும் சருமத்தினுள் ஊடுருவி, மெல்லிய கோடுகளையும் சுருக்கங்களையும் சரியாக்கும். சருமம் இளமையாகக் காட்சியளிக்கும்.

கண்களுக்கு அடியில் காணப்படுகிற சுருக்கங்கள், கருவளையங்களுக்கான சிகிச்சையிலும் கொலாஜன் ஐ பேடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கொலாஜன் மாஸ்க்குகளை அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையின் பேரில் உபயோகிப்பதுதான் சிறந்தது. சுய மருத்துவம் போல சில வித சுய அழகு சிகிச்சைகளும் ஆபத்தானவையே.0hcfdPK

Related posts

10 நிமிடத்தில் முகத்தில் இருக்கும் நீங்கா கருமையைப் போக்கும் அற்புத மாஸ்க்!

nathan

தினமும் உங்கள் ச‌ருமதை பாதுகாக்கும் ஒரு சில வழி முறைகள்

nathan

சூப்பர் டிப்ஸ் முடி, நகம், முகத்தை நொடியில் பிரகாசிக்க செய்யலாம்!

nathan

ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்…..

nathan

இந்த ஒரு மூலிகை நீராவி முகப்பருக்களை மாயமாக மறைய வைத்திடும்!!

nathan

உங்களுக்கு தெரியுமா ஒயினை கொண்டு இப்படியெல்லாம் செய்யலாமா?

nathan

பெண்களே வயதானாலும் இளமையாக காட்சியளிக்க சில டிப்ஸ்…

nathan

எப்பொழுதும் இளமையான தோற்றத்தை தரும் எண்ணெய் சருமம்

nathan

உங்களுக்கு தெரியுமா உடலில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற இப்படியொரு வழியா!

nathan