28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சருமத்தில் தேவையற்ற முடி வளர்ச்சியை தடுக்கும் பவுடர்

Natural Beautyபெண்களுக்கு முகம் மற்றும் இதர பாகங்களில் அதிக அளவு முடி வளர்வதற்குக் காரணமே, ஹார்மோன் மாற்றங்களும் பழக்க வழக்கங்களும் தான். த்ரெடிங், வாக்ஸிங் போன்றவற்றைச் செய்யும் போது முடி வளராமல் தடுக்கவும் சில சிகிச்சைகள் இருக்கின்றன.

சுட்ட வசம்புத்தூள், குப்பைமேனி கீரை பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், கஸ்தூரி மஞ்சள் பவுடர். இந்த நான்கையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி, அழகைக் கொடுக்கும் அசத்தல் மிக்ஸ் இது! மஞ்சள் பூசிக் குளிப்பது போல் இந்த பவுடரை முகம் முதல் பாதம் வரை நன்றாக தேய்த்து குளியுங்கள்.

புருவத்தில் இந்த பவுடர் படுவதால் முடி உதிர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம். வாரம் இருமுறை குளித்து வந்தாலே முகம், உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகள் நிறம் மாறி, பின் உதிர்ந்துவிடும். மிருதுவான ப்யூமிக்ஸ்டோனை (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) வாங்குங்கள்.

கலந்து வைத்திருக்கும் மிக்ஸை குழைத்து ப்யூமிக்ஸ்டோனில் தடவி, முடி இருக்கிற பகுதிகளில் லேசாகத் தேயுங்கள். இதை தினமும் செய்து வந்தாலும் முடி உதிரும். மேற்கொண்டு முடி வளராது.

த்ரெடிங், வாக்ஸிங் என்று அடிக்கடி பியூட்டி பார்லர் பக்கம் போகிறவர்கள் தினமும் முகம், கை, கால்களை கழுவும்போதெல்லாம் சோப்புக்கு பதிலாக இந்த மிக்ஸை பயன்படுத்தலாம். இதனால் முடியை அகற்றியதால் ஏற்பட்ட கருமையும் புள்ளிகளும் மறைவதுடன் சருமமும் மருதுவாகும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா பெண்கள் தாலிக்கயிறை மாற்றும் போது கவனிக்க வேண்டியவை

nathan

நகங்களின் பளபளப்பிற்கும் வளர்ச்சிக்கும்

nathan

வெண்ணெய்யை பயன்படுத்தி பாருங்க…!! சருமம் பொலிவுடன் இருக்க

nathan

இடுப்பு,வயிறு அழகாக இருக்க

nathan

உங்கள் நகங்கள் மீதும் கவனம் தேவை

nathan

சூப்பரான முட்டை பிரை

nathan

சூப்பர் டிப்ஸ்.. சிலருக்குக் கண்களுக்குக் கீழ் படர்ந்துள்ள திட்டுகளை போக்கும் அழகு குறிப்புகள்….!

nathan

அழகே… ஆரோக்கியமே.. பளபள தோலுக்கு பாதாம்

nathan

வறட்டு இருமல், இழுப்பு வலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்க….

sangika