26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
23 1448276885 5 skinpore
சரும பராமரிப்பு

தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால் பெறும் நன்மைகள்!!!

எண்ணெய்களிலேயே ஆலிவ் எண்ணெயில் தான் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நேச்சுரல் ஃபேட்டி ஆசிட்டுகள் அடங்கியுள்ளன. இந்த எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஒன்று. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள் ஏராளமாக இருப்பதால் தான், இது சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன், முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம். இங்கு தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால் பெறும் நன்மைகள் பட்டியலிடபபட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள்.

புத்துணர்ச்சியான சருமம்

ஆலிவ் ஆயிலில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் ஏ ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.

தழும்புகள் மறையும்

முகத்தில் ஏதேனும் தழும்புகள் இருந்து, அதனைப் போக்க வேண்டுமானால், தினமும் இரவில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். இதனால் அவ்விடத்தில் புதிய செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். மேலும் இச்செயல் மூலம் நாளடைவில் தழும்புகளும் மறையும்.

முதுமைத் தோற்றம் தடுக்கப்படும்

தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், அதில் உள்ள வைட்டமின் ஈ, சரும செல்கள் சீரழிவடைவதைத் தடுத்து, சருமம் விரைவில் முதுமைத் தோற்றம் அடைவதைத் தடுக்கும். மேலும் ஆலிவ் ஆயிலில் உள்ள ஸ்குவாலின் அமிலம், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, சருமம் தளர்வதைத் தடுத்து, இளமையுடன் வைத்துக் கொள்ள உதவும்.

வறட்சியைத் தடுக்கும்

உங்களுக்கு மிகுந்த வறட்சியான சருமம் என்றால், ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வாருங்கள். இப்படி தினமும் செய்வதன் மூலம், சரும வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பொலிவு அதிகரிக்கும்

பொதுவாக மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும் தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, பொலிவான முகத்தைப் பெறலாம்.

23 1448276885 5 skinpore

Related posts

குளிர்காலத்தில் சருமத்தில் தோல் உரிவதைத் தடுக்கும் ஃபேஸ் மாஸ்க்குகள்

nathan

உங்கள் சருமத்தின் நிறத்தினை கூட்டச் செய்யும் 9 பொருட்கள்!

nathan

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஆரஞ்சு தோல் ஃபேஸ் பேக்

nathan

உங்களுக்கு தெரியுமா சரும அழகிற்கு நெய்யை எப்படி பயன்படுத்தலாம்

nathan

அழகுக் குறிப்புகள்

nathan

எப்பவுமில்லாம உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா? இந்த ஒரு ரெசிபி ட்ரை பண்ணுங்க!!

nathan

சரும அலர்ஜி இருப்பவர்கள்.. பாதுகாக்கும் முறையும்..

nathan

சருமத்தை ஐசிங் கொண்டு உங்கள் காலைப் பொழுதை தொடங்குங்கள்

nathan

சருமத்தை தூய்மையாக்கும் கிளிசரின்

nathan