தற்போது பலரும் கண் பார்வை கோளாறுகளை அதிகம் சந்திக்கின்றனர். கண்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வைட்டமின் ஏ குறைபாடும் ஓர் காரணம். எனவே கண் பார்வை மேம்பட வைட்டமின் ஏ நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதில் வைட்டமின் ஏ நிறைந்த உணவுப் பொருள் தான் கேரட்.
இந்த கேரட்டை பச்சையாகவோ, ஜூஸ் போட்டோ, மில்க் ஷேக் செய்தோ அல்லது லஸ்ஸி வடிவிலோ குடிக்கலாம். இங்கு கேரட் லஸ்ஸியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து மாலையில் குழந்தைகளுக்கு கொடுத்து வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
கெட்டித் தயிர் – 1 கப் சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன் கேரட் – 2 பால் – 1/4 கப் ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை சிறு குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரைத் திறந்து, மிக்ஸியில் போட்டு, பால், சர்க்கரை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் தயிர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு மென்மையாக மீண்டும் அரைத்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், கேரட் லஸ்ஸி ரெடி!!!