26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

குளிர்கால குறிப்புகள்

tamil-beauty-alaku-tamil.jpgnm_வறண்டு விறுவிறுவென இழுக்கும் சருமம், வெள்ளை வெள்ளையாக செதில் படிந்த சருமம், வெடித்து ரத்தம் கசியும் உதடுகள், பொடுகு காரணமாக  அரித்துப் பிடுங்கும் கூந்தல், சேற்றுப்புண் மற்றும் வெடிப்பினால் பாத எரிச்சல்… இப்படி உச்சி முதல் உள்ளங்கால் வரை பல்வேறு பிரச்னைகளை  சந்திக்க வேண்டியிருக்கும் பனிக்காலத்தில். வெயில் காலத்தைவிட அதிக அக்கறையும் பராமரிப்பும் தேவைப்படுகிற இந்த நாட்களில் அழகை  எப்படியெல்லாம் தக்க வைத்துக் கொள்ளலாம்? ஆலோசனைகள் சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி.

குளிர்காலத்தில் ஏற்படுகிற சருமம் மற்றும் கூந்தல் பிரச்னைகளை 3 வழிகளில் சமாளிக்கலாம்.

உணவு, உடற்பயிற்சி மற்றும் பராமரிப்பு…

குடிக்கிற தண்ணீரில் இருந்து, சாப்பாடு வரை எல்லாமே வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உடலுக்கு சூடு தரக்கூடிய  உணவுகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு கோதுமை, பாதாம், வேர்க்கடலை, பிராக்கோலி, கேரட், பசலைக்கீரை  போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். நிறைய மிளகு சேர்த்து, தினம் ஒரு சூப் குடியுங்கள்.

அடுத்தது உடற்பயிற்சி…

குளிர்கால அழகுக்கும் உடற்பயிற்சிக்கும் என்ன சம்பந்தம் என்றுதானே நினைக்கிறீர்கள்? இருக்கிறது. குளிர்காலத்தில் இழுத்துப் போர்த்திக் கொண்டு,  அதிகமாகத் தூங்கலாமா என்று தோன்றும். மந்தமாக உணர்வோம். குளிருக்குப் பயப் படாமல், தினம் சிறிது நேரம் நடைப் பயிற்சியோ, ‘வார்ம் அப்’  பயிற்சிகளையோ மேற்கொண்டால், உடல் சூடாவதுடன், மந்த நிலை மாறும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதன் பிரதிபலிப்பை உங்கள் சருமத்தில்  காண்பீர்கள்.

மூன்றாவதாக பராமரிப்பு…

முதல் வேலையாக குளிர்காலம் குட்பை சொல்லும்வரை சோப்புக்கு நீங்கள் குட்பை சொல்லுங்கள். கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, ஆரஞ்சு  பழத்தோல் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய வைத்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். அதற்கெல்லாம்  நேரமில்லாதவர்கள், கடலை மாவு, பயத்தமாவுடன், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற ரெடிமேட் ஆரஞ்சு பழத் தோல் பொடியை வாங்கிக் கலந்து  கொள்ளலாம். குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் சோப்புக்கு பதில் இந்தப் பொடியை மட்டுமே உபயோகிக்கவும். தலைக்குக் குளிக்க  செம்பருத்தி இலை, சீயக்காய், வேப்பிலையை உலர வைத்து அரைத்த பொடியை உபயோகிக்கவும். குளிர் காலத்தில் பொடுகும் அதிகமாகும். முடி  வறண்டு போகும். வேர்க்கால்கள் அடைபடும். இவற்றைத் தவிர்க்க வாரம் இருமுறை தலை குளியல் அவசியம்.

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் – சம அளவு எடுத்து  வெந்நீர் உள்ள  பாத்திரத்தினுள் வைத்து டபுள் பாயிலிங் முறையில் வெதுவெதுப்பாக சூடாக்கி, தலை முதல் கால் வரை தடவி மசாஜ் செய்யவும்.  எண்ணெய்  முழுக்க சருமத்தினுள் இறங்கும் அளவுக்குத் தேய்த்து, 15 நிமிடங்கள் ஊறவிடவும். மேலே சொன்ன கடலைமாவு, பயத்தமாவு, ஆரஞ்சு தோல்  கலவைப் பொடியை சிறிது  தண்ணீர்விட்டுக் குழைத்து பேஸ்ட் போலச் செய்து, தேய்த்துக் குளிக்கவும். தலைக்கு தனியே அரைத்து வைத்துள்ள  பொடியை சாதம் வடித்த கஞ்சியில் குழைத்து, மறுபடி அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி, வெதுவெதுப்பான சூட்டுடனேயே தேய்த்து அலசவும்.  ஷாம்புவை தவிர்க்கவும்.  குளிப்பதற்கு எப்போதும் இளம் சூடான தண்ணீரையே பயன்படுத்தவும். குளிர்ந்த தண்ணீரும் வேண்டாம்.

அதிக சூடான தண்ணீரையும் தவிர்க்கவும். தண்ணீரில் சில துளிகள் யுடிகோலன் கலந்து குளிப்பது, மண்டை பாரமாக உணர்வது, தலையில் நீர்  கோர்த்துக் கொண்ட உணர்வு போன்றவற்றிலிருந்து நிவாரணம் தரும். தலைக்குக் குளித்ததும், கூந்தலைக் காய வைக்கிறேன் என்கிற பெயரில்  டவலால் முடியை அடிப்பார்கள் பலர். இப்படிச் செய்தால், ஏற்கனவே பனிக்காலத்தில் பலவீனமாக இருக்கும் கூந்தலானது உடைந்து, வேரோடு  உதிரும்.

சருமம்…

வறண்ட சருமம் மட்டும்தான் பாதிக்கப்படும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை எனத் தவறாக நினைக்க  வேண்டாம். ஈரக்காற்றில் எல்லா சருமமும் வறண்டு போகும். குளித்து முடித்த உடனேயே முகம், கை, கால்களுக்கு மாயிச்சரைசர் தடவ வேண்டும். சரும வறட்சி நீங்க… ஆலிவ் ஆயிலில் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து அடித்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடங்கள்  ஊறியதும் வெதுவெதுப்பான தண்ணீரில், கடலைமாவுக் கலவை உபயோகித்துக் கழுவவும்.

1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 3 துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, சருமத்தில் தடவி, 15 நிமிடங்கள் ஊறவைத்து,  சருமத்துக்கான பொடி உபயோகித்துக் கழுவவும். வைட்டமின்இ எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து  வெதுவெதுப்பாக்கி, சருமத்தில் தடவிக் கழுவலாம். வைட்டமின்இ எண்ணெய், வீட்ஜெர்ம் எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து,  சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறியதும் கழுவினால், குளிர்காலத்தில் சருமத்தில் தோன்றுகிற வெண்மையான படிவங்கள் மாறும்.

உதடுகளுக்கு… பாலாடை அல்லது கிளிசரினும் பன்னீரும் கலந்த கலவை அல்லது வெண்ணெய் இந்த மூன்றில் ஒன்றை தினமும் இரு வேளைகள்  தடவி, மென்மையாக மசாஜ் செய்து வந்தால் உதடுகள் வறண்டு, வெடிக்காமலிருக்கும். பிங்க் நிறம் பெறும்.

கை, கால்களுக்கு…

கிளிசரினும் பன்னீரும் கலந்த கலவையை இரவில் கை விரல் நகங்களுக்குத் தடவிக் கொண்டு படுக்கலாம். சிலருக்கு பனிக்காலம் வந்தாலே  சேற்றுப் புண் வரும். அவர்கள் விரல்களுக்கு மட்டும் மருதாணி வைத்துக் கொள்ளலாம். பனி மற்றும் மழைக்காலங்களில் வெளியே சென்று வந்த  ஒவ்வொரு முறையும் வேப்பிலை, புதினா சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவ வேண்டியது  அவசியம். தேன், நெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து, பாத வெடிப்புகளில் தடவி வந்தால்  பனிக்கால வெடிப்பு மறையும்.

பார்லரில்…

தலைக்கு ஹாட் ஆயில் மசாஜ் செய்து கொள்ளலாம்.

சருமத்துக்கு மாயிச்சரைசிங் ஃபேஷியல், பட்டர் ஃபேஷியல், சாக்கோ ஃபேஷியல், ஒயின் ஃபேஷியல் மற்றும் வைட்டமின்இ ஃபேஷியல் செய்து  கொள்ளலாம்.

Related posts

பளிச் முகத்திற்கு பலவித பேக்குகள்

nathan

சரும பிரச்சனைகளை தீர்த்து முகத்தை பளபளப்பாக்கும் கஸ்தூரி மஞ்சள்

nathan

பட்டைய கிளப்பும் ஜான்வி கபூர் நடன விடியோ!

nathan

சூட்டை கிளப்பி விடும் உடையில் க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள பிரபல இளம் நடிகை..!

nathan

பாத் டவல் அணிந்து போஸ் கொடுத்த நடிகை மாளவிகா..இதை நீங்களே பாருங்க.!

nathan

உங்கள் சருமத்திற்கு மெருகூட்டும் பிபி, சிசி, டிடி க்ரீம் பற்றி தெரியுமா? தெரியலைன்னா தெரிஞ்சுக்கோ!

nathan

தடுப்பூசி எங்களுக்கு வேண்டாம்… வடகொரியா அதிபர் கிம்

nathan

கருவளையம் போக்கும் கைமருந்து

nathan

சப்போட்டா ஃபேஷியல்

nathan