22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
news 1363221467
கண்கள் பராமரிப்பு

கண்ணில் கருவளையமா? கவலை வேண்டாம்!

கண்ணைச் சுற்றிலும் பலருக்கு கருவளையம் போன்று இருக்கும். இது, அவர்களின் அழகை குறைத்து விடும். பெண்கள் என்றால், மிகுந்த கவலைப்படுவர். இதற்காக, டாக்டர்களை பார்த்து அலைய வேண்டியதில்லை. தயிரும், மஞ்சள் தூளும் போதும் என்கின்றனர், இயற்கை மருத்துவத்தை விரும்பும் அழகுக்கலை நிபுணர்கள்.

அவர்கள் தரும் ‘டிப்ஸ்’ இதோ:
* தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனத்தை கலந்து பசைபோல் ஆக்கி, தினமும் கண்ணின் கீழ் பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால், ஓரிரு மாதங்களில், கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

* கருவளையத்திற்கு உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல, முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி தோல் பளிச்சிடும்.

* கற்றாழை ஜெல்லும் கருவளையத்தை போக்கும். ஜெல்லால், கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக, ‘மசாஜ்’ செய்து விடுங்கள். வட்ட வடிவில், மசாஜ் செய்ய வேண்டும்.

* குளிப்பதற்கு முன், சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால், கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும்.

* கண்களின் சோர்வு நீங்க, மற்றொரு நல்ல இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

இப்படி ஆலோசனை தருகின்றனர் நிபுணர்கள். கண்ட கண்ட, ‘கிரீம்’களை வாங்கி காசை கரியாக்குவதை விட, எளிதாக கிடைக்கும் இந்த சிகிச்சை முறைகள் நல்லது தானே…!
news 1363221467

Related posts

கண்களில் உண்டாகும் சதைப்பையை தடுக்கும் ஈஸியான வழிகள்!!

nathan

வெயில் காலத்தில் கண் எரிச்சலை போக்க டிப்ஸ்

nathan

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள்!…

sangika

முகத்தின் பொலிவைக் கெடுக்கும் கருவளையம்!…

sangika

கருவளையம் மறைய..

nathan

உங்களுக்கு தெரியுமா கண் புரை வராமல் தடுக்க வீட்டிலேயே எளிய மருத்துவங்கள்!!

nathan

கவர்ந்திழுக்கும் கண்கள்…

nathan

காஜல் பயன்படுத்தி வந்த கருவளையத்தை நீக்க!….

sangika

புருவம் அடர்த்தியாக வளர இத செய்யுங்கள்!…

sangika