24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

தலைமுடியின் வளர்ச்சியை தூண்டும் வெந்தயக்கீரை

Fenugreek-leaves-improve-hair-growthதலை முடியின் வளர்ச்சியைத் தூண்டும் அற்புத மருந்து வெந்தயக் கீரையில் இருக்கிறது. 2 கட்டு வெந்தயக் கீரை எடுத்து, காம்பை நீக்கிவிட்டு கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இதை சீடைக்கு உருட்டுவது போல உருட்டி, 2 நாள் வெயிலில் காய வையுங்கள் (உருண்டை உடைந்தாலும் பரவாயில்லை). கால் கிலோ நல்லெண்ணையைக் காய்ச்சி, மிதமான சூட்டில் இறக்கி அதில் இந்த உருண்டைகளை போடுங்கள். 10 நாட்கள் நன்றாக ஊறவிட்டு வடிகட்டுங்கள்.

இந்த தைலத்தை தினமும் தலைக்குத் தேய்த்துக் கொள்ளுங்கள். உடம்பு உஷ்ணம் குறைந்து தலைமுடி நீண்டு வளரத் தொடங்கும். தோலை பளபளப்பாக்கவும் இந்த தையம் உதவும். இதனுடன் 5 டீஸ்பூன் விளக்கெண்ணை கலந்து உச்சி முதல் பாதம் வரை சூடுபரக்க தேய்த்து, ஐந்து நிமிடம் கழித்து பயத்தமாவு போட்டுக் குளித்தால்… தோலின் வறட்சி நீங்கி, பளபளவென மின்னும். உடம்புக்கு அது குளுமையும் தரும்.
சிலருக்கு மூக்கின் மேல் சொரசொரப்பும், கரும்புள்ளிகளும் தோன்றி முக அழகைக் கெடுத்துவிடும். இதற்கும் தீர்வு இருக்கிறது வெந்தயக்கீரையில் சிறிது வெந்தயக் கீரையுடன் தயிர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை மூக்கின் மேல் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
a263f4c5-d094-4286-8af8-5eb082a37a37_S_secvpf.gifதொடர்ந்து இப்படிச் செய்து வந்தால், புள்ளிகளும் சொரசொரப்பும் காணாமல் மூக்குத்தி இல்லாமலே மூக்கு டாலடிக்கும். முகத்தில் கரும்புள்ளியும், அம்மை தழும்பும் மாறாத வடுக்களை ஏற்படுத்திவிடும். இந்த வடுக்களுக்கு `குட்பை’ சொல்ல வைக்கிறது வெந்தயக்கீரை.
வெந்தயக் கீரையை அரைத்து விழுதாக்கி, ஒரு துணியில் கட்டி விடுங்கள். சாறு இறக்கிவிடும். இந்தச் சாறு ஒரு டீஸ்பூனுடன், 2 சொட்டு தேன் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடம் மசாஜ் செய்து, கழுவுங்கள். சில தடவை இப்படி செய்தாலே, இருந்த இடமே தெரியாமல் வடு மறைந்துவிடும்.
கண் இமைகளில் முடி உதிர்ந்தால் அழகான கண்களும் `டில்’லாக தெரியும். முடி கொட்டுவதை நிறுத்தி படபடக்கும் இமைகளைச் தருகிற `பளிச்’ டிப்ஸ் இது. வெந்தயக் கீரையை அரைத்து ஜுஸாக்குங்கள். இந்த ஜுஸில் பஞ்சைத் தோய்த்து இமைகளின் மேல் தடவுங்கள்.
5 நிமிடங்கள் கழித்து `ஜில்’ தண்ணீரில் கழுவி விடுங்கள். முடி உதிர்வது நின்று கருகருவென இமை முடிகள் வளரத் துவங்கும். பொம்மையின் கண்கள் போன்ற அழகான கண்கள் கிடைக்கும்.

Related posts

ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கும் முறை

nathan

தினமும் தலை முடியை அலசுபவர்களா நீங்கள்? பல பக்க விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்

nathan

கூந்தல் உதிர்தலை தடுக்க‍ இதோ ஒரு அருமையான ஆலோசனை…

sangika

இயற்கையாகவே நம் கூந்தல் வளர்ச்சியை தூண்ட மிளகாய்!…..

sangika

தலைமுடி வளர்ச்சிக்கு பூண்டு எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா?

nathan

கூந்தல் அடர்த்தியாக வளரச் செய்யும் வெங்காயத்தின் அற்புத பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள் தோழிகளே!

nathan

பூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்…

nathan

உறுதியான தலை முடிக்கு……

nathan

நிரந்தரமாக பொடுகை போக்க வேண்டுமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan