உலகளவில், சீனா மற்றும் இந்தியாவின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியாவும், இரண்டாவது இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளன. மாறாக, ஜப்பான், ரஷ்யா மற்றும் வட கொரியாவின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டில் உள்ள பெண்களுக்கு அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வடகொரிய அதிபர் கண்ணீருடன் உணர்ச்சிகரமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நிகழ்ச்சியின் போது பார்வையாளர்களில் அமர்ந்திருந்த பெண்களும் வடகொரிய அதிபரின் பேச்சைக் கேட்டு கதறி அழுதனர். அப்போது, கிம் ஜாங்-உன், “குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைத் தடுப்பதும், குழந்தைகளை வளர்ப்பதும் தாய்மார்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு’’ என்றார்.
நமது நாட்டை வலுவாக மாற்றியதில் தாய்மார்களின் பங்கிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். “கட்சி நடவடிக்கைகளிலோ, தேசிய நடவடிக்கைகளிலோ நான் ஈடுபடும் போது, தாய்மார்களைப் பற்றியே நினைத்துக் கொள்கிறேன்,” என்றார்.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் வட கொரியாவின் பிறப்பு விகிதம் 1.8 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பெண்ணுக்கு 1.8 குழந்தைகள் பிறக்கின்றன. வடகொரியாவின் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், வடகொரியாவின் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது:
ஆனால் வடகொரியா போன்ற அண்டை நாடுகளில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. தென் கொரியாவின் பிறப்பு விகிதம் 0.78 ஆக குறைந்துள்ளது. ஜப்பானின் பிறப்பு விகிதம் 1.26 ஆக குறைந்துள்ளது.
🚨KIM JONG UN CRIES AT THE NATIONAL MOTHERS MEETING
Kim Jong Un burst into tears as the announcer spoke about the readiness of mothers to sacrifice themselves for their children’s future. pic.twitter.com/kSlyUkdour
— Mario Nawfal (@MarioNawfal) December 5, 2023