30.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
saw
மேக்கப்

லிப்.. லிப்.. லிப்ஸ்டிக்!

அழகு விடயத்தில் ஆண்களை விட பெண்கள் எப்போதும் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.
ஆடை, நகை அலங்காரம், முகத்திற்கு தேவையான ஒப்பனைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தும் போது சில நேரங்களில், உதட்டிற்கு கொஞ்சம்கூட பொருத்தமில்லாத லிப்ஸ்டிக்கை போடுவார்கள்.

எப்படி போடுவது?
பொதுவாக, வெள்ளையாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும்.
ஆனால் மாநிறமாகவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்தல் அவசியம்.

கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.

வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.

லிப் லைனர்
லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.

லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.

உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.

பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும்.
தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும்.

மேலும் உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது.
அவ்வாறு செய்வதால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதனும் போய்விடும்.

இந்த முறைகளை பின்பற்றி உதடுகளை பராமரித்தால் அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.
saw

Related posts

அழகு குறிப்புகள்:முதன்முறையா மேக்கப்!

nathan

அழகு சாதனங்களுக்கும் எக்ஸ்பைரி இருக்கு

nathan

டீன்ஏஜ் பெண்களின் அழகுக் கவலை

nathan

உங்களுக்கு தெரியுமா மாம்பழம் ஒரு அழகுசாதன பொருளா?

nathan

பியூட்டி பார்லர் சுயதொழில் தொடங்கலாமா?

nathan

எண்ணெய் பசை அதிகமா இருக்கா?

nathan

லிப்ஸ்டிக் போடுவது எப்படி? – உங்களுக்கும் தெரியாத சில குறிப்புகள்

nathan

அழகை அதிகரித்து காட்டும் மேக் அப் டிப்ஸ்

nathan

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்……

sangika