26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
mango
ஊறுகாய் வகைகள்

மாம்பழ பாப்டி

தேவையானவை:

மாம்பழம் – ஒன்று
கடலை மாவு, கோதுமை மாவு – தலா 10 டீஸ்பூன்
பொடித்த வெல்லம் – ஒரு கப்
நெய் – தேவையான அளவு
ஏலக்காய்த்தூள், கேசரி கலர் – தலா ஒரு சிட்டிகை
முந்திரி – 10
பால் – ஒரு டீஸ்பூன்

செய்முறை: வெல்லத்துடன் அது மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து சூடாக்கி, ஒரு கொதி வந்த பின் இறக்கி வடிகட்டவும். மாம்பழத்தின் தோல், கொட்டையை நீக்கி விழுதாக அரைக்கவும். வெறும் வாணலியில் கடலை மாவு, கோதுமை மாவை தனித்தனியே லேசாக வறுக்கவும். முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் மாம்பழக் கூழ், பால், ஏலக்காய்த்தூள், கேசரி கலர், வெல்லக் கரைசல், கடலை மாவு, கோதுமை மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). இதனுடன் தேவையான அளவு நெய் விட்டு மேலும் கிளறி, நன்கு பொங்கி வரும் பதத்தில் இறக்கி, நெய் தடவிய தட்டில் சேர்த்து சமப்படுத்தி, ஆறிய பின் வில்லைகள் போட்டு, மேலே முந்திரியைப் பதித்துப் பரிமாறவும்.

mango

Related posts

மாங்காய், எலுமிச்சை, நெல்லி… ஊறுகாய் உடலுக்கு உகந்ததா?

nathan

தக்காளி ஊறுகாய்

nathan

மீன் ஊறுகாய் செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா…?

nathan

கத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி

nathan

தக்காளி இனிப்பு பச்சடி

nathan

ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய்!….

sangika

இஞ்சி-நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய….

nathan

வடுமா ஊறுகாய்

nathan

சுவையான இஞ்சி புளி தொக்கு!

sangika