29.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
sugar exfoliation scrub
சரும பராமரிப்பு

சருமத்தை பொலிவடைய செய்யும் சர்க்கரை ஸ்கரப்

பொதுவாக சர்க்கரை ஒரு ஆரோக்கியமற்ற பொருள் என்று தான் தெரியும். ஆனால் இந்த சர்க்கரை அழகுப் பராமரிப்பில் சிறந்தப் பொருளாக உள்ளது. எப்படியெனில், சர்க்கரையைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், சருமத்தின் மென்மைக்கு இடையூறாக இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகள் போன்றவற்றை எளிதில் வெளியேற்றிவிடும்.

அதற்கு சர்க்கரையை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது அதனை வேறு சில சரும பராமரிப்பு பொருட்களுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். இதனால் சருமம் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும்.

அதிலும் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமம் மிகவும் மென்மையாகிவிடும்.

சர்க்கரை முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும் குணம் கொண்டவை. எப்படியெனில் சர்க்கரையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்யும் போது, சருமத் துளைகள் திறந்து, அதிலுள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்குவதோடு, சரும செல்கள் எளிதில் பாதிக்காதவாறு பாதுகாக்கும்.
• அவசரமாக வெளியில் கிளம்பும் போது, சர்க்கரையை தண்ணீரில் கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை 5 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், சருமம் சுத்தமாக பொலிவோடு காணப்படும்.

• கிளின்சரில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, ஈரமான துணியால் துடைத்து, பின் நீரில் கழுவலாம். இதனாலும் சருமம் அழகாக ஜொலிக்கும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம்.

• எலுமிச்சை சாற்றில் சிறிது நாட்டு சர்க்கரையை சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி, சருமம் பொலிவுறும்.
• க்ரீன் டீயில் ஆன்டி-ஏஜிங் தன்மை அதிகம் இருப்பதோடு, அது சருமத்தில் பாதிக்கப்பட்டுள்ள திசுக்களை குணமாக்கும் தன்மை கொண்டவை. ஆகவே க்ரீன் டீயில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை சருமத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சரும சுருக்கம் நீங்கி, முதுமைத் தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.

• தேங்காய் எண்ணெயில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தை ஸ்கரப் செய்யலாம். வேண்டுமெனில், தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்
sugar exfoliation scrub

Related posts

உடல் துர்நாற்றத்தை போக்க எளிய இயற்கை வழிகள்!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! தோல் பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்

nathan

கழுத்தில் கறுமை மறைய…

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க சருமத்தில் வெண்ணெய் இப்படி ஒரு மாற்றத்த செய்யுமாம்.

nathan

உடல் அழகு – சில அழகுக் குறிப்புகள்:

nathan

தேவையற்ற ரோமங்களை வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

nathan

முகப்பருவை சரியான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் வீட்டிலேயே சரிசெய்ய முடியும்.

nathan

கோடையில் சருமத்தை பாதுகாக்க கடலை மாவை பயன்படுத்துங்க

nathan

கழுத்திலுள்ள கருமையை போக்க புதினாவை பயன்படுத்தலாம் !! எப்படி தெரியுமா?

nathan