30.3 C
Chennai
Tuesday, Jul 8, 2025
VUIFLcV
மேக்கப்

பியூட்டி பார்லர் சுயதொழில் தொடங்கலாமா?

நேச்சுரல்ஸ் வீணா

அழகுத்துறை என்பது என்றுமே ஆடம்பரமாகப் பார்க்கப்படுவதில்லை. அதை ஆரோக்கியத்துடனும் தொடர்புடைய ஒரு துறையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ஹேர் கட், வாக்சிங் என சுத்தம், சுகாதாரத்துடன் தொடர்புடைய சிகிச்சைகளுக்காகவும் இன்று அழகு நிலையங்களுக்கு வருகிறார்கள் மக்கள். அந்த சிகிச்சைகளை ஆடம்பரம் என்று சொல்ல முடியாது. அவசியமானதாகவே கருதுவதால் அழகுத் துறையின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.

முன்பு இந்தத் துறை இந்தளவுக்கு ஒருங்கிணைப்புடன் இயங்கவில்லை. இன்று அழகுத் துறையின் டிரெண்டே மாறி விட்டது. படித்தவர்கள், திறமையானவர்கள் இந்தத் துறையில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை பியூட்டி பார்லர்கள் திறக்கப்பட்டாலும் எல்லாவற்றுக்கும் நிச்சயம் வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. புதிதாக பார்லர் தொடங்கும் முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

பார்லர் தொடங்கப் போகிற ஏரியா மிக முக்கியம். பார்லர் தொடங்கப்படவிருக்கிற இடத்தின் அருகில் உள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களுக்கு பார்லர் வர வேண்டிய தேவையும் வசதியும் இருக்குமா எனப் பார்க்க வேண்டும். ‘என்னிடம் திறமை இருக்கிறது.. என்னைத் தேடி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் மக்கள் வருவார்கள்’ என்று நினைக்க வேண்டாம். அதெல்லாம் நீங்கள் பார்லர் பிசினஸில் உங்களைத் தக்க வைத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்ற பிறகுதான் சாத்தியம்.

அடுத்தது வேலை தெரிந்த ஆட்களை நியமிக்க வேண்டியது முக்கியம். கற்றுக்குட்டிகளை வைத்து வேலை வாங்கினால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அடுத்த முறை உங்களைத் தேடி வர மாட்டார்கள். மூன்றாவதாக தரமான அழகு சாதனங்களை உபயோகிக்க வேண்டியது முக்கியம். நீங்கள் உபயோகிக்கிற பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு அலர்ஜியையோ, பக்க விளைவுகளையோ ஏற்படுத்தக்கூடாது.

தரத்தில் எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக்கூடாது. இன்று பார்லர் ஆரம்பித்துவிட்டு, நாளைக்கே லாபம் கொட்டும் என்கிற கனவில் மிதப்பது மிகவும் தவறு. இந்தத் துறையில் பொறுமை மிக மிக அவசியம். உழைப்பையும் முயற்சியையும் தொடர்ந்து கொண்டிருங்கள். லாபமும் நற்பெயரும் தானாக வரும்.
VUIFLcV

Related posts

உங்கள் புன்னகை இன்னும் அழகாகும்!

nathan

பெண்களின் அழகும்.. அலங்காரமும்..!

nathan

மேக்கப் போடுவது ஒரு தனி கலை

nathan

கண்ணாடி அணியும் பெண்களுக்கான மேக்கப் டிப்ஸ்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கன்னங்களின் அழகான ஒப்பனைகளுக்கான 5 முக்கிய குறிப்புகள்

nathan

அழகு குறிப்புகள்:முதன்முறையா மேக்கப்!

nathan

பளபளக்கும் ஐ-ஷாடோவை உபயோகிப்பதற்கான வழிமுறைகள்

nathan

மே‌க்க‌ப் பா‌க்‌ஸி‌ல் மு‌க்‌கியமானவை

nathan

மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்கணுமா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க…

nathan