27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
24xnews%2B%25281%2529%2B%25281%2529%2B %2BCopy
முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள அழுக்கை நீக்கும் ஸ்கரப்

முகம் பொலிவிழந்து அசிங்கமாக காணப்படுவதற்கு காரணம், முகத்தில் அழுக்குகள் அதிகம் தேங்கியிருப்பது தான். இத்தகைய அழுக்குகளை அன்றாடம் சுத்தம் செய்து வந்தாலே, முகத்தை பிரகாசமாக வைத்துக் கொள்ளலாம். தினமும் முகத்தில் படியும் அழுக்குகளை முற்றிலும் வெளியேற்ற உதவும் சில சமையலறைப் பொருட்களை பார்க்கலாம்..

* பாதாமில் சருமத்திற்கு வேண்டிய வைட்டமின் ஈ ஏராளமாக நிறைந்துள்ளது. இதற்கு பாதாமை பொடி செய்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு, கடலை மாவு மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து கழுவி வர, முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, சருமத்திற்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைத்து, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

* 1/2 கப் உளுத்தம் பருப்பை நீரிடல் ஊற வைத்து அரைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய், 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் 15 நிமிடம் ஸ்கரப் செய்து கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பொலிவோடு காணப்படும். இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்து வர வேண்டும்.

* அரிசி மாவை தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி முகம் மற்றும் கை, கால்களிலும் தடவி ஸ்கரப் செய்தால், அழுக்குகள், இறந்த செல்கள் முழுவதும் வெளிவந்து, முகம் பிரகாசமாக இருக்கும். அரிசி மாவில் வைட்டமின் ஈ, கே மற்றும் பி6 உள்ளது. இது சோர்வடைந்து காணப்படும் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும்.

* பச்சை பயறு சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றும். பச்சை பயறை பொடி செய்து, அதில் தேன் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.24xnews%2B%25281%2529%2B%25281%2529%2B %2BCopy

Related posts

இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிட சூப்பர் டிப்ஸ்!….

sangika

தழும்பை மறைய வைக்கனுமா?

nathan

மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? அப்ப இத படிங்க!

nathan

முகத்தின் கருமையை போக்கும் இயற்கை மாஸ்க்குகள்

nathan

உங்களுக்கு தெரியுமா டீயை வெச்சும் ஃபேஸ் மாஸ்க் பண்ணலாம் !!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கரும்புள்ளிகளை நீக்க சில சிம்பிளான வழிகள்!!!

nathan

உங்கள் முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதா? அதை மறைக்க இதோ சில வழிகள்!

nathan

Super பேஷியல் டிப்ஸ்…..!

nathan

முகம் பளபளக்க/ Kasthuri Manjal

nathan