சின்னசாமி மைதானத்தில் இன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. போட்டிக்கு முன்னதாக பெங்களூருவில் உள்ள டீம் ஹோட்டலில் இந்திய அணி தீபாவளியை கொண்டாடியது.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தோல்வி அடையாத ஒரே அணியான இந்தியா, பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
பெங்களூருவில் உள்ள டீம் ஹோட்டலில் இந்திய அணி மற்றும் அதன் துணை ஊழியர்கள் தீபாவளியை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினர். தற்போது இந்திய அணி தீபாவளியை கொண்டாடும் புகைப்படம் எக்ஸில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கே.எல்.ராகுல் தீபாவளியின் புகைப்படத்தை X இல் வெளியிட்டார். படத்தில், கிரிக்கெட் வீரர்கள் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து, பிரகாசமான புன்னகையுடன் கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.