22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
1148617
Other News

தினமும் ரூ.5.6 கோடி வழங்கி ஷிவ் நாடார் முதலிடம்

2022-23ஆம் ஆண்டில் அதிக நன்கொடை அளித்த இந்தியர்களின் பட்டியலை ஹுருன் அமைப்பு வெளியிட்டுள்ளது. HCL இணை நிறுவனர் ஷிவ் நாடார் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

ஷிவ் நாடார் 2022-23 நிதி ஆண்டில் ரூ.2,042 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். சராசரியாக நாளொன்றுக்கு ரூ.5.6 கோடி அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். 2-வது இடத்தில் விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி உள்ளார். அவர் கடந்த நிதி ஆண்டில் ரூ.1,770 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். மூன்றாம் இடத்தில் முகேஷ் அம்பானி (ரூ.376 கோடி), நான்காம் இடத்தில் குமார மங்களம் பிர்லா (ரூ.287 கோடி), ஐந்தாவது இடத்தில் கவுதம் அதானி (ரூ.285 கோடி) உள்ளனர்.

இந்த பட்டியலில் பஜாஜ் குடும்பம் ரூ.264 கோடி நன்கொடையுடன் 6வது இடத்தில் உள்ளது.

வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் (ரூ. 241 கோடி ) 7வது இடத்திலும், சைரஸ் பூனவல்லா மற்றும் ஆதார் பூனவல்லா (ரூ. 179 கோடி ) 8வது இடத்திலும், நந்தன் நிலகேனி, நிதின் காமத் மற்றும் பலர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

இந்தப் பட்டியலில் ரோகினி நிலகேனி, அனு ஆகா, ரீனா காந்திதிவாலி உள்ளிட்ட ஏழு பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ரோகினி நிலகேனி 170 கோடி ரூபா நன்கொடை வழங்கினார்.

Related posts

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தச் சிறந்த வழி என்ன?

nathan

AI மூலம் உருவாக்கப்பட்ட இலங்கை சிகிரியா ஓவியங்கள்

nathan

மரியா லாரன்ஸின் அந்தரங்க காட்சிகள் இணையத்தில்

nathan

நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் லண்டனில் உள்ள ஹோட்டலுக்கு இரவு உணவிற்கு வந்தார்

nathan

VJ பிரியங்காவின் கணவர் வசி யார் தெரியுமா?

nathan

நடிகர் மன்சூர் அலிகான் நீக்கம்? பரபரப்பு அறிக்கை!

nathan

பிரபலத்துடன் 22 வயது நடிகை ஷிவானி!!

nathan

முதலிரவு இவருடன் தான் நடந்தது..!கூறிய ஷகீலா..!

nathan

சிம்பு தரப்பு மறுப்பு! – இலங்கை பெண்ணுடன் திருமணமா?

nathan