30.8 C
Chennai
Monday, Nov 18, 2024
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

பால் ஆடை

almond-milk-mask-facialபாலில் நமக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் இருக்கின்றன. கால்சியம், புரோட்டீன் மற்றும் -ஊட்டச் சத்து அதிகமுள்ள பாலைப் பருகுதல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

பால் உடலுக்கு எப்படி சக்தியைக் கொடுக்கிறதோ, அப்படியே நம் சரும அழகுக்கும் பால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பால் சிறத்ந மாய்சரைசராகவும், க்ளென்சராகவும் பயன்படுகிறது. சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் பால் உதவும்.

ஆடை எடுக்கப்பட்ட பால் எல்லாவித சரும வகைக்கும் ஏற்றது. முகத்தில் பேக் போடும் பவுடருடன்,பால் கலந்து உபயோகிக்கலாம்.

ஏடோடு இருக்கும் பால் உலர் சருமத்திற்கு ஏற்றதாகும்.

எண்ணெய் சருமத்திற்கு ஆடை எடுக்கப்பட்ட பால் அல்லது மோர் உபயோகிக்கலாம்.

கண்களின் அடியில் உள்ள கருவளையத்தைப் போகக்க பாலாடை க்ரீம் பூசுவது நல்லது. (இது வெளியில் தனியாகக் கிடைக்கும்)

தோலில் அடிக்கடி அரிப்பு ஏற்படுபவர்களுக்கும் அதிகமாக பயணம் மேற்கொள்பவர்களுக்கம் பால் நல்லது. காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து, முகத்தில் பூசி சிறிது நேரத்தில் குளிர்ந்த நீரில் கழுவினால், முகம் பளிச்தான்.

மோர்

எண்ணெய் வழியும் சருமத்திற்கு மோரில் பஞ்சை நனைத்து முகம், கழுத்தில் தடவி 10 அல்லது 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும். (பல அழகுக் குறிப்புகளில் மோரின் உபயோகம் கொடுக்கப்பட்டிருக்கிறது).

தயிர்

தயிரை முகத்தில் அப்படியே தடவினால் அதிலுள்ள கொழுப்புச் சத்து சருமத் துவாரங்களை அடைத்து விடும். குறிப்பாக எண்ணெய் சருமம் உடையவர்கள், தயிரை முகத்திற்கு உபயோகிக்கக்கூடாது.
தலை முடிக்கு தயிரை சிறந்த கண்டிஷனராக உபயோகப்படுத்தலாம்.
மருதாணிப் பவுடர் + தயிர் அல்லது வெந்தயப் பவுடர் + தயிர் உபயோகப்படுத்தி தலைத் தேய்த்து முடியை அலசலாம்.

வெண்ணெய்

கடையில் வாங்கும் வெண்ணெயை விட வீட்டிலேயே சேர்த்துத்  தயார் செய்யும் வெண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது.
முகத்திற்கு மசாஜ் செய்ய வெண்ணெய் பயன்படுத்தலாம். ஆனால் முகத்தில் பருக்கள் உள்ளவர்கள் வெண்ணெய் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வெண்ணெயைத் தலையில் தேய்த்து தலைமுடியை அலசலாம்.
உதடுகள் கறுப்பாக இருப்பவர்கள் சிறிதளவு வெண்ணெயை உதட்டில் தினமும் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதனால் உதட்டிலுள்ள கருமை நிங்க, இயற்கையான ரோஸ் நிறம் கிடைக்கும்.

Related posts

சூப்பரான சுரைக்காய் சப்ஜி

nathan

நீங்களே பாருங்க.! பிரபல இயக்குனர் அகத்தியனின் மூன்று மகள்கள் மற்றும் மருமகன்கள் புகைப்படம்…

nathan

அழகான சருமத்திற்கு நலங்கு மாவு.

nathan

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தர்பூசணி

nathan

இந்த கலவையை உங்கள் மூக்கில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்தால் . . .

nathan

40 வயதைக் கடந்த பெண்களுக்கு…..டாக்டர் ஃபேமிலி தரும் டிப்ஸ்…! ~ பெட்டகம்

nathan

அழகு சாதனப் பொருள் வாங்கும் போது கவனமா இருங்க!!

nathan

பவுடர் போட போறீங்களா

nathan

சூப்பர் அவகாடோ ஃபேஸ் மாஸ்க்! வறண்ட சருமம், முகச் சுருக்கத்துக்கு

nathan