என்னென்ன தேவை?
சால்ட் பிரெட் – 2,
தயிர் – 1 கப்,
உப்பு – 1/2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1,
காரா பூந்தி, கொத்தமல்லி இலைகள் – (அலங்கரிக்க) தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பச்சை மிளகாயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். தயிருடன் அரைத்த பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி எடுக்கவும். ஒரு அகண்ட பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு, பிரெட் துண்டுகளை ஒவ்வொன்றாக தண்ணீரில் தோய்த்தெடுத்து, நன்கு பிழிந்து உருண்டையாக்கி, இருகைகளாலும் அமுக்கி, வடை போல் செய்து கொள்ளவும். ஒரு தட்டில் பிரெட் வடைகளை அடுக்கி தயிர்க் கலவையை மேலே ஊற்றி, கொத்தமல்லி, பூந்தி தூவி அலங்கரிக்கவும்.