28 C
Chennai
Wednesday, Nov 13, 2024
Castor oil 1
கண்கள் பராமரிப்பு

கண் இமைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்துவது எப்படி?

மந்தமான இமைகள் பற்றி கவலைபடுகிறீர்களா? மீண்டும் இயற்கையான அழகை பெறுவதற்கு இந்த பூமியில் என்ன செய்யலாம் என்று வியப்பு அடைகிறீர்களா ? நீங்கள் ஒப்பனை பொருள் பயன்படுத்தலாம் என்று யோசிப்பவர்களா ? அவைகள் மிகவும் விலை உயர்ந்த மற்றும் ரசாயனங்களால் உருவானவை அதனால் அதற்கு அறுவை சிகிச்சை எதாவது செய்ய வேண்டுமா? இல்லை, அது திட்டமிடுதலுக்கு முழுமையாக வெளியே உள்ளது. அதனால் என்ன செய்ய முடியும்? ஏதாவது இயற்கை தயாரிப்புகள் உள்ளதா உங்கள் கண் இமையை அதிக செலவு இல்லாமல் அழகு படுத்துவதற்கு?
ஆமாம், இருக்கிறது. அது தான் ஆமணக்கு எண்ணெய்.
நாம் ஆமணக்கு எண்ணெய் பற்றி பேசும் போது அது ஒரு இயற்கை மலமிளக்கியாக நம் சிறு வயது முதல் நம் வீடுகளில் அறியப்பட்டு வருகிறது. மேலும் அது ஒரு அற்புதமான மலமிளக்கி என்ற நிலையை தவிர கண் இமைகள் வளர்ச்சிக்கு நல்ல ஒரு அதிசயத்தக்க பரிகாரமாக அமைந்துள்ளது. ஆமாம், அடர்த்தியான‌ கண் இமைகள் வேண்டும் என்று விரும்புவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒரு தீர்வாக அமையும். இயல்பாகவே ஆமணக்கு எண்ணெய் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. ஆதலால் தற்போதைய காலங்களில் ஆமணக்கு எண்ணெய் அடர்த்தியான கண் இமைகள் மற்றும் கண் இமைகள் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தபட்டு வருகின்றது.
ஓ வேறு எதற்காக நீங்கள் காத்து இருக்கின்றிர்கள்? ஆமணக்கு எண்ணெய் உங்கள் கண் இமைகளை எப்படி வலுவாக , அழகு உள்ளதாக மாற்றுகிறது என்று பாருங்கள்.
கண் இமைகள் வளர்ச்சிக்கு ஆமணக்கு எண்ணெய் என்ன செய்கிறது?
ஆமணக்கு எண்ணெய், வைட்டமின் ஈ மற்றும் பிற புரதங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதாகும். இது பூசண எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு உடையது.
இது முடி வளர்ச்சி மற்றும் முடி உடைவதை நீக்கி வலுபடுத்தவும் உதவுகிறது. இதில் எதிர்ப்பு அழற்சி அமிலங்கள் நிறைந்து உள்ளது
கண் இமைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்துவது எப்படி?
ஆமணக்கு எண்ணையின் பயன்களை பற்றி அறிந்த பின் ,சிறந்த கண் இமைகளை பெறுவதுக்கு அது ஒரு முக்கிய காரணி ஆகிறது. அதுக்கு முன்பு சந்தையில் இருந்து சிறந்த ஆமணக்கு எண்ணெய் எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தூய, இயற்கையான மற்றும் குளிர் படுத்தப்பட்ட ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும். சந்தைகளும் இயற்கை ஆமணக்கு எண்ணெய் இல்லாமல் வேறு தொழில்துறை ஆமணக்கு எண்ணெய் போன்ற ஒன்றை தருகிறது.
ஆமணக்கு எண்ணெய் இரவில் தூங்க செல்வதுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும்.நல்ல பயனை பெற கீழ்வரும் இரண்டு வழிகளை பின்பற்றலாம்.
1. முதலில் சாதாரண நீர் கொண்டு உங்கள் முகம் மற்றும் கண்களை கழுவ வேண்டும். பின்பு நல்ல காய்ந்த துண்டு பயன்படுத்தி அதை தொடைக்க வேண்டும்.
2. பின்பு சில துளி ஆமணக்கு எண்ணையை எடுத்து தூரிகையால் கண் இமைகளின் தொடக்கத்தில் இருந்து பூச வேண்டும்.
ஆமணக்கு எண்ணெய் கண் இமைகளின் வேர்களை அடைவது முக்கியம் ஆகும். எனவே மிகுந்த கவனத்துடன் துல்லியமாக பண்ண வேண்டும். இது மாதிரி மற்றொரு கண் இமைகளுக்கும் பண்ண வேண்டும்.
3. கண் பகுதியில் எண்ணெய் இருந்தால் அதை தொடைத்து விடலாம். அடுத்த நாள் காலை கண் இமைகளை சுத்தம் பண்ணி விடலாம். இப்படி ஆமணக்கு எண்ணெய் கண் இமைகளுக்கு விட்டு வருவது முக்கியமானதாகும்.(கண்டிப்பாக இது உங்களுக்கு பிடிக்காத ஒன்றாகும் !) கண்டிப்பாக தினமும் இரவில் இதனை செய்ய வேண்டும்.
ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்தும் பிற முறைகள் :-
1. கிளிசரின் மற்றும் முட்டை வெள்ளை கரு கலப்பு
கிளிசரினுடன் முட்டை வெள்ளை கரு இரண்டு துளிகள் கலந்து கண் இமைகளுடன் பூச வேண்டும். இந்த கலவை கண் இமைகளை தடிமானாக , உறுதியாக மற்ற உதவுகிறது. அதே நேரத்தில் முட்டை வெள்ளை கருவில் இருக்கும் அதிகமான புரதம் கண் இமைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
2. ஆலிவ் எண்ணெய்
சுகாதார நலன்கள் பொருட்டு ஆலிவ் எண்ணெய் உடன் ஆமணக்கு எண்ணெய் கலந்து கண் இமைகளுக்கு பூசலாம். ஆலிவ் எண்ணெய் கண் இமைகள் வளர்ச்சிக்கு உதவுகிறது . மேலும் நிறைய புரதங்கள் மற்றும் தாதுக்கள் உடையது.
இதுமாதிரி மற்ற பொருட்களுடன் இணைந்து பயன்படுத்தவதால் மிக அற்புதமான பயன் உண்டு என்று கண்டு அறியப்பட்டுள்ளது. அழகான கண் இமைகளை பெறுவதற்கு இது ஒரு இயற்கையின் கொடை.இனிமேல் உங்கள் கண் இமைகள் பற்றி நீங்கள் கவலை பட வேண்டியது இல்லை என்று நான் நினைகிறேன்.சரி தானே ?Castor oil 1

Related posts

கருவளையம் நீங்க இத செய்யுங்கள்!…

sangika

இதை இரவில் படுக்கப்போகும் முன், நம் கண்ணை சுற்றி தடவி வந்தால், கருவளையம் மறைந்து விடும்.

sangika

கருவளையமா…கவலை வேண்டாம் !

nathan

கண்களுக்கு போடும் மஸ்காராவை 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுங்கள்

nathan

உங்கள் முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை சீர் செய்து கொள்ளுங்கள்!…

sangika

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள்!…

sangika

தேனைக் கொண்டு கருவளையங்களைப் போக்குவது எப்படி?

nathan

காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ்!

sangika

கண்ணை என்ன செய்யலாம்?

nathan