ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, காசாவைக் கட்டுப்படுத்தும் ஹமாஸின் பிரதிநிதிகள் மாஸ்கோவிற்கு விஜயம் செய்ததாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் அவர் மேலதிக விபரங்களுக்கு செல்லவில்லை.
மாஸ்கோவிற்கு வருகை தந்தவர்களில் ஹமாஸ் அதிகாரி அபு மர்சூக் அடங்குவதாக பாலஸ்தீனிய தூதுக்குழுவின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் உள்ள வெளிநாட்டு பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஹமாஸ் தலைவர் அபு மர்சூக்கை ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது.
வேகமாக வளரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்…! ரஷ்யா நேரடியாக இஸ்ரேல்-ஹமாஸ் போரில் நுழையும், ஈரான் மற்றும் ரஷ்யா பற்றிய சமீபத்திய தகவல்கள்
கூடுதலாக, பாலஸ்தீன எல்லையில் இருந்து ரஷ்யர்கள் மற்றும் பிற வெளிநாட்டினரை வெளியேற்றுவதை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல், ஈரான் மற்றும் ஹமாஸ் உட்பட மத்திய கிழக்கில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுடனும் ரஷ்யா உறவுகளைக் கொண்டுள்ளது.
தற்போதைய மத்திய கிழக்கு நெருக்கடிக்கு அமெரிக்க இராஜதந்திரத்தின் தோல்வியே காரணம் என ரஷ்ய அரசாங்கம் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
போர் நிறுத்தம் மற்றும் அமைதி தீர்வை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் அலி பாரி கானி தற்போது மாஸ்கோவிற்கு விஜயம் செய்து ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் மிகைல் கல்ஜினை சந்தித்துப் பேசியதாகவும் ஜகரோவா கூறினார்.