ஒரு காலத்தில் தென்னிந்திய திரையுலகில் நடன உலகில் உலகப் பிரபலமாக கொடிகட்டிப் பறந்த நடிகை பத்மினி.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றார். பத்மினி நான்கு வயதிலிருந்தே நடனம் கற்றுக்கொண்டார்.
கதகளி, பரதம், மணிப்பூரி, குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்றவற்றிலும் முறையான பயிற்சி பெற்றவர். மேலும் 10 வயதில் பத்மினி தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.
‘வாழ்க்கை ’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், பல்வேறு மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பத்மினி மருத்துவரான ராமச்சந்திரனை மணந்து அமெரிக்காவில் குடியேறினார். பத்மினிக்கு பிரேம் என்ற ஒரே மகன் உள்ளார்.
1986 ஆம் ஆண்டு உதயம் பதிஞ்சல் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்தார், ஆனால் அதன்பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இது அவருடைய புகைப்படம்,