ஆர்யா நயன்தாரா ஜெய் – நஸ்ரியா நடித்த ராஜா ராணி, விஜய் நடித்த பிகில், மெர்சல், தெறி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் அட்லீ. இவர் சமீபத்தில் ஷாருக்கானை வைத்து பதான் படத்தை இயக்கி இந்தியாவின் முக்கிய இயக்குனராக மாறினார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வேளுக்குடி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று தனது மனைவி பிரியா மற்றும் குழந்தை மீனுவுடன் மன்னார்குடி சென்றார்.
இதற்காக மன்னார்குடியில் தங்கியிருந்த அவர், தனது குலதெய்வ கோவிலுக்கு செல்லும் முன் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து கூடநல்லூர் அருகே வேளுக்குடியில் உள்ள குலதெய்வம் கோயிலான ஸ்ரீ அங்காரா பரமேஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்ய புறப்பட்டு சென்றார்.