சிலருக்கு சருமம் விரைவில் வறண்டு விடும். அப்படிப்பட்டவர்கள் இந்த பேஸ் மாஸ்க்கை தினமும் போட்டு வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
சரும வறட்சியை போக்கும் பேஸ் மாஸ்க் ஆலிவ் எண்ணெய், காபி மற்றும் தேன் பேஸ் மாஸ்க் :
காபி விதைகள் முகத்தின் மந்தமான மற்றும் உயிரற்ற தோலை இல்லாமல் செய்து ஒரு சிறந்த வழியை உருவாக்குகிறது.
ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து, உங்கள் முகத்தில் பூசி வர உங்கள் முகத்தின் சோர்வை போக்கி புத்துணர்ச்சியை தரும்.
தேன் ஒரு தேக்கரண்டி, காபி விதை ஐந்து tsp மற்றும் ஆலிவ் எண்ணெய் 1tsp சேர்த்து பேஸ்ட்டாக செய்து முகம் மற்றும் கழுத்து வரை பூசி 30 நிமிடங்கள் கழிந்து நீரில் கழுவினால் ஒளிரும் சருமத்தை பெறலாம். இவ்வாறு 1 வாரத்தில் இருமுறை செய்து வர நல்ல மாற்றம் கிடைப்பதை நீங்களே உணர்வீர்கள்.
உங்கள் முகத்தில் ஒரு மாம்பழத்தை பேஸ்ட்டாக செய்து முகத்தில் பூசவும். 10 நிமிடம் கழித்து சூடான தண்ணீரால் கழுவ வேண்டும்.
இது உங்கள் சரும வறட்சியை போக்கி மென்மையானதாக மாற்றும்.