இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது, இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 1,300ஐ நெருங்குகிறது. இந்நிலையில், போர் நிலவரம் குறித்து பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
இஸ்ரேல் பிரதமருக்கு நன்றி. இஸ்ரேலின் தற்போதைய நிலைமை குறித்து அவரிடம் கேட்டேன். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் இந்தியா எதிர்க்கிறது. இக்கட்டான காலங்களில் இந்தியர்கள் இஸ்ரேலை ஆதரிக்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.