26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
sl1334
அசைவ வகைகள்

செட்டிநாடு மீன் வறுவல்

தேவையான பொருட்கள்
மீன் – 1 /2 கிலோ
மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி
தனியாத்தூள் – 5 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் – 1
மிளகு – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
கடுகு – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 3 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கொத்து
எண்ணெய் – 1 1 /2 குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை
* மீனை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம்பழச்சாறைப் பிழிந்து பேஸ்ட் போல செய்து கொண்டு, அதில் மீனை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 1 மணி நேரமாவது ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைத்தால் நன்றாக இருக்கும்.
* மிளகு, காய்ந்த மிளகாய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை வாணலியில் தீயாமல் வறுத்து, ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்.
* ஊற வைத்துள்ள மீனை இந்த அரைத்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி எடுத்து அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும்.
* அடுப்பின் தணலைக் குறைவாகப் பயன்படுத்தினால் மசாலா நன்கு சேர்ந்து, மொறு மொறு, மீன் வறுவல் கிடைக்கும்.
* இந்த முறையில் தயாரிக்கப்படும் மீன் வறுவல் சாம்பார் சாதம், குருமா, தனியாக சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
sl1334

Related posts

அவரைக்காய் முட்டை பொரியல் செய்வது எப்படி?

nathan

குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் விரும்பும் சிக்கன் பிரைட் ரைஸ்

nathan

சூப்பரான மீன் முட்டை பிரை!….

sangika

சுவையான இறால் சுக்கா மசாலா

nathan

கிராமத்து மொச்சை கருவாட்டு குழம்பு

nathan

ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்வது எப்படி

nathan

இறால் பெப்பர் ப்ரை

nathan

சுவையான தந்தூரி சிக்கன்

nathan

புதினா ஆம்லேட்

nathan