22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
nTAa46F
அசைவ வகைகள்

KFC ஸ்டைல் ப்ரைடு சிக்கன் – KFC Style Fried Chicken

என்ன தான் சொல்லுங்க.KFC சிக்கனுக்கு நிகர் KFC தான்.எப்படி தான் அவ்வளவு சுவையோ தெரியவில்லை.முன்பு எல்லாம் யோசிப்பேன்.எப்படி தான் இவ்வளவு சுவையாக செய்றாங்க.சிக்கனின் மேல்புறத்தில் மட்டும் இல்லாமல் உள்ளேயும் எப்படி சுவையாக இருக்கு என்று.

அதன் பிறகு என்னுடைய தேடுதல் வேட்டையில் நான் கண்டு அறிந்ததினை நீங்களும் செய்து பாருங்கள்..
nTAa46F
நான் எப்பொழுதும் சிக்கனை ப்ரை செய்யும் பொழுது மசாலாவினை அப்படியே சிக்கனுடன் சேர்த்து பிரட்டி , அதனை 2 – 3 மணி நேரமாவாது ஊறவைத்து பிறகு பொரித்து எடுப்பேன்.ஆனால் வெளியில் சுவையாகவும் உள்ளே சுப்புனு இருக்கும்..எவ்வளவு நேரம் ஊறினாலும் இப்படி தான் இருக்கின்றது..

ஆனால் இந்த முறையில் சிக்கன் + மசாலா பொருட்கள் + சிக்கன் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைப்பதால் சிக்கனில் எல்லா பொருட்களும் சேர்த்துவிடுகின்றது. அதனால் சிக்கனை சாப்பிடும் பொழுது அதன் சுவையினை நம்மால் கண்டு அறியமுடிகின்றது..

அதே போல மைதா மாவுடன் பிரட்தூள் சேர்த்தால் மிகவும் க்ரிஸ்பியாக இருக்கும்..

உங்கள் விருப்பத்திற்கு எற்றாற் போல காரம், மசாலாவினை சேர்த்து கொள்ளவும்.
சிக்கனை 2 – 3 மணி நேரம் ஊறவைக்க நேரம் இல்லையெனில் 1 மணி நேரம் மிதமான சுடுதண்ணீரில் ஊறவைக்கவும்.(அதற்கு மேல் ஊறவைக்கவேண்டாம்….சிக்கனுக்கு (நமக்கும் தான்…) நல்லது இல்லை…)

வாங்க…நீங்களும் இந்த முறையில் சிக்கனை செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

சிக்கனை ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 2 – 3 நேரம் (குறைந்தது)
சமைக்க தேவைப்படும் நேரம்: 15 – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ சிக்கன் லெக் பிஸ்(Leg Piece) – 4
§ எண்ணெய் – பொரிப்பதற்கு
சிக்கனை ஊறவைக்க :
§ மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
§ இஞ்சி பூண்டு விழுது – 1 தே.கரண்டி
§ உப்பு – 3 தே.கரண்டி
§ எலுமிச்சைசாறு – 2 தே.கரண்டி
§ பார்ஸிலி இலை/கொத்தமல்லி இலை – சிறிதளவு (விரும்பினால்)
முட்டை கலவை :
§ முட்டை வெள்ளை கரு – 2
§ மிளகாய் தூள்/ மிளகு தூள் – 1/2 தே.கரண்டி
§ உப்பு – 1/4 தே.கரண்டி
மைதா கலவை :
§ மைதா மாவு – 1 கப்
§ பிரட் தூள் – 1/2 கப்
§ உப்பு – 1/2 தே.கரண்டி

செய்முறை :
§ சிக்கனை சுத்தம் செய்து லெக்பீஸுல் கத்தியினை வைத்து சிறிது கீறிவிடவும். (இப்படி கீறுவதால் மசாலா சிக்கன் உள்ளே சென்றுவிடும்)
§ ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கனை போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீரை ஊற்றிவும்.
§ பிறகு சிக்கனுடன் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் அந்த தண்ணீருடன் கரைத்துவிடவும். இதனை அப்படியே குறைந்தது 2 – 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
§ முட்டையின் வெள்ளை கரு + மிளகாய் தூள்/மிளகு தூள் + உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
§ மைதா மாவு + பிரட் தூள் + உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் கலந்து வைக்கவும்.
சிக்கன் ஊறி 2 – 3 மணி பிறகு :
§ கடாயில் எண்ணெயினை காயவைக்கவும்.
§ சிக்கனை தண்ணீரில் இருந்த்து எடுத்து அதனை முட்டை கலவையில் தோய்த்து பிறகு அதனை மைதா மாவில் பிரட்டி எடுக்கவும்.

§ பிறகு அதனை எண்ணெயில் போட்டு மிதமான தீயில் 6 – 8 நிமிடங்கள் வேகவிட்டு பொரித்து எடுக்கவும்.

§ சுவையான KFC ஸ்டைல் சிக்கன் ரெடி.

Related posts

இறால் மக்ரோனி : செய்முறைகளுடன்…!

nathan

இறால் ப்ரை &கிரேவி

nathan

வஞ்சரம் மீன் ப்ரை – சன்டே ஸ்பெஷல்!

nathan

மீல் மேக்கர் கிரேவி

nathan

சுவையான சிக்கன் பிரைட் ரைஸ்

nathan

சுவையான மட்டன் குடல் குழம்பு

nathan

இறால் பெப்பர் ப்ரை (prawn pepper fry)

nathan

மட்டன் பிரியாணி,பிரியாணி, மட்டன், மட்டன் பிரியாணி

nathan

சன்டே ஸ்பெஷல்: முட்டை ஆம்லெட் குழம்பு

nathan