இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மற்றும் அவரது பிரிந்த மனைவி ஆயிஷாவுக்கு தில்லி குடும்பநல நீதிமன்றம் புதன்கிழமை விவாகரத்து வழங்கியது. கொடுமையின் அடிப்படையில் விவாகரத்து செய்ய மனுதாரருக்கு (ஷிகர் தவான்) உரிமை உண்டு என்று நீதிமன்றம் கூறியது.
நீதிபதி ஹரீஷ் குமார் தனது தீர்ப்பில், இரு தரப்பினரும் விவாகரத்துக்கு பரஸ்பரம் ஒப்புக்கொண்டதாகவும், நீண்ட காலத்திற்கு முன்பே திருமணம் முடிந்துவிட்டதாகவும் கூறினார். ஆகஸ்ட் 8, 2020 முதல் இருவரும் ஜோடியாக வாழவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஷிகர் தவான் 2012ல் ஆயிஷா முகர்ஜியை திருமணம் செய்தார். இருவருக்கும் ஜோராவல் என்ற மகன் உள்ளார். ஆயிஷாவிற்கு திருமணத்திற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.
கிரிக்கெட் உலகக் கோப்பை 2023: இந்திய அணியின் போட்டிகள் – விவரங்கள்
ஷிகர் தவான் ஆயிஷாவுடனான திருமணத்தை முறித்துக்கொண்டு இந்தியாவில் நிரந்தரமாக குடியேறுவதாக உறுதியளித்த பின்னர் திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஆயிஷா சொன்னபடி செய்யாமல் மீண்டும் முன்னாள் கணவருடன் நெருங்கி பழகினார்.
அவர் தனது இரண்டு மகள்கள் மற்றும் மகன் ஜோராவலுடன் ஆஸ்திரேலியா திரும்பினார். இதனால் மகனைப் பிரிந்து தவித்து வரும் ஷிகர் தவான் விவகாரத்து செய்ய முடிவு செய்தார்.
ஆயிஷா தனது சொந்தப் பணத்தில் ஆஸ்திரேலியாவில் தனது பெயரில் ஒரு சொத்தை வாங்கும்படி வற்புறுத்தியதாகவும் தவான் கூறினார். தனது பெயரை கெடுக்கும் நோக்கில் ஷிகர் தவானின் ஐபிஎல் அணியின் நிர்வாகத்திற்கு செய்திகளை அனுப்பியதாகவும் ஆயிஷா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஷிகர் தவானின் விவாகரத்து வழக்கில் நீதிபதி ஹரிஷ் குமார் இந்தக் காரணங்களை குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கினார். அதில், தவானின் வாதத்தை ஏற்று விவாகரத்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஷிகர் தவானின் மகன் ஜோரவாலை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லவும், அதனால் ஒவ்வொரு ஆண்டும் தவான் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பாதி விடுமுறை நாட்களைக் கழிக்க ஆயிஷாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஷிகர் தவான் தனது மகனைச் சந்திக்கவும், வீடியோ கால் மூலம் அவரைச் சந்தித்து பேசவும் ஆஸ்திரேலியா செல்ல விரும்பினால் ஒத்துழைக்குமாறு ஆயிஷாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.