25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

வீட்டிலேயே பேசியல் செய்வது எப்படி?

ld2114முதலில் பேஷியல் எதற்கு, அதனால் உண்டாகும் பலன்கள் பற்றி சொல்கிறேன். பேஷியல் என்றதும் ஏதோ ப்யூட்டி பார்லர் விஷயம் என்று நாம் ஒதுங்கிவிடத் தேவையில்லை. அந்த காலத்திலிருந்தே பேஷியல் வீடுகளில் செய்து கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் பேஷியல் என்ற பெயரை உபயோகப்படுத்தாமல் அது ஒரு ரொட்டீனாக இருந்தது. பேஷியலைப் பற்றி சாதாரணமாக சொல்வது என்றால் வாரம் ஒரு முறை முகத்தில் நன்றாக எண்ணெய்த் தேய்த்து, பாசிப்பருப்பு மாவு தேய்த்து குளிப்பதை சொல்லலாம். பேஷியல் செய்வதால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீக்கப்படுகின்றன. முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. முகத்தின் துளைகளில் தங்கும் அழுக்குகள் நீக்கப்பட்டு பருக்கள் உருவாகாமல் சருமம் பளிச்சென்று ஆகிறது. ஏற்கனவே பருக்களினால் உண்டான வடுக்களும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து சருமத்தை பொலிவுறச் செய்கிறது. மேலும் பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் என்று சொல்லப்படும் கரும்புள்ளிகளும் நீக்கப்படுகின்றன. இந்த பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் மூக்கு, தாடை ( chin) போன்ற இடங்களில் உருவாகின்றன.

தேவையான பொருடகள்

பேஷியல் கிட் – காஸ்மெட்டிக் கடைகளில் கிடைக்கும். கிடைக்காதவர்களுக்கு முனை ஷார்ப்பாக இல்லாத ஸ்பூன் கூட போதும். இல்லாவிடில் பிளக்கரின் (Plucker) மறுமுனை போதும். ஆனால் எல்லாமே நன்றாக ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டிருப்பது அவசியம். சரியாக ஸ்டெரிலைஸ் செய்யப்படாவிட்டால் சிலருக்கு பேஷியல் முடித்தும் முகத்தில் பொரி பொரியாக சிகப்பாக தோன்றும் (அதனாலேயேஇன்றுவரை நான் பார்லர் சென்று பேஷியல் செய்து கொள்வதில்லை.). ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் அனைத்தையும் போட்டு கொதிக்க வைக்கவும். ஸ்பூனானாலும் இவ்வாறே செய்யுங்கள்.

முகம் பார்க்கும் சிறிய கண்ணாடி.
Apricot ஸ்க்ரப்பர் அல்லது எதாவது பேஷியல் ஸ்க்ரப்பர் – Steve’s Formula, Clear Tone போன்ற பல வித பிராண்டுகளில் கிடைக்கின்றது.
மசாஜ் க்ரீம் – ஷியா பட்டர் க்ரீம் (Shea Butter) சருமத்திற்கு மிகவும் நல்லது. ஆலிவ் ஆயில் கூட உபயோகப்படுத்தலாம். ஆனால் ஷியா பட்டர்தான் பெஸ்ட்.

பேஷியல் டிஷ்யூ – தடிமனான டிஷ்யூக்கள் சருமத்திற்கு நல்லதல்ல. மென்மையான டிஷ்யூக்களை உபயோகப்படுத்துங்கள்.
Facial Sauna – மிக்சி போன்று இருக்கும். அதில் தண்ணீர் ஊற்றி ஸ்விட்சை ஆன் செய்தால் நீராவி வரும். அதில் முகத்தை காண்பித்து ஆவி பிடிக்கலாம். இது கிடைக்காதவர்கள் அல்லது இதற்காக செலவழிக்க விருப்பம் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது சமையல் செய்யும் பாத்திரம். வெந்நீர் வைக்கும் பாத்திரத்தையே உபயோகிக்கலாம்.

பேஷியல் பேக்: இதற்கான செய்முறையை எனது பயனளிக்கும் குறிப்பில் ஏற்கனவே கொடுத்துள்ளேன். அதில் சொல்லி இருப்பதைப் போன்று பொடி தயாரித்துக் கொண்டால் மிகவும் நல்லது. இல்லாவிடில் ஒரு ஸ்பூன் கடலைமாவு, 1/4 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், 1/4 ஸ்பூன் சந்தனம், பன்னீர் 1 ஸ்பூன், முல்தானி மட்டி -1/2 ஸ்பூன் ( வறண்ட சருமம் இருப்பவர்கள் தவிர்க்கவும்), எலுமிச்சை சாறு- 10 சொட்டு, தயிர்- 1 ஸ்பூன்(எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் தவிர்க்கவும்) எடுத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலக்கி பேஷியல் ஆரம்பிக்கும் முன் ப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். முன்பே செய்து வைத்தால் மிகவும் காய்ந்து போய்விடும். ப்ரிட்ஜில் வைக்க வேண்டும் என்று சொல்வது முகத்திற்கு சில்லென்று இருக்கும் என்பதற்காக மட்டுமே. ப்ரிட்ஜில் வைத்தே ஆக வேண்டும் என்பதில்லை.
பேஷியல் செய்த பிறகு 8 மணி நேரம் போல முகத்திற்கு எதுவும் போடாதீர்கள். சோப் கூட வேண்டாம்.

எனவே பேஷியல் செய்ய மதியம் அல்லது சாயங்கால வேளைகளை தேர்ந்தெடுங்கள். ஏனென்றால் பேஷியல் செய்த சருமத்தில் துளைகள் சரியாக மூடாத பட்சத்தில் இப்படி உடனடியாக க்ரீமோ, சோப்போ உபயோகித்தால் பாதிக்கப்படும். மேலும் சூரிய வெளிச்சமும் அப்போது முகத்தில் படாமல் இருப்பது நல்லது. நான் முன்பே எனது பார்ட்டி மேக்கப் பதிவில் குறிப்பிட்டபடி பார்ட்டி விசேஷத்துக்கு முதல் நாள் பேஷியல் , ப்ளீச்சிங் முதலியவற்றை தவிருங்கள்.

பேஷியல் செய்முறை :images (3)

பேஷியலுக்கு ரெடியானவுடன் ஒவ்வொரு ஸ்டெப்பாக சரியாக செய்யுங்கள். மாற்றி செய்தால் பலனும் சரியாக இருக்காது. இதனை நான் டைட்டில் கொடுத்து ஸ்டெப் பை ஸ்டெப்பாக விவரிக்கிறேன்.

1) க்ளென்சிங் : தலை முடியை நன்றாக வாரி உச்சியில் கொண்டையாக க்ளிப் செய்து விடுங்கள். முதலில் கழுத்து, முகத்தை நன்றாக சோப் போட்டு கழுவுங்கள் அல்லது க்ளென்ஸிங் மில்க் கொண்டு கழுத்து, முகத்தை சுத்தமாக்குங்கள்.

2) இறந்த செல்கள் நீக்கம் : இப்போது ஸ்க்ரப்பரை முகம், கழுத்து போன்ற இடங்களில் தடவி கன்னங்களில் வட்ட வடிவமாகவும். மூக்கின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு விரல்களினால் மேலும், கீழுமாகவும், நெற்றியில் வட்ட வடிவமாகவும், தாடையில் அடிப்பகுதியை கீழ்ப்புறமாகவும், மேல் பகுதியை வட்ட வடிவமாகவும் ஸ்கரப் செய்யுங்கள். கழுத்தில் மேல் புறமாக ஸ்க்ரப் செய்யுங்கள். கண்ணை சுற்றிய பகுதிகள் மிகவும் மென்மையானவை. அந்தப் பகுதிகளில் ஸ்க்ரப்பிங் செய்யாதீர்கள். ஸ்க்ரப்பிங் செய்ததும் முகத்தை கழுவுங்கள். பல பார்லர்களில் இப்போதுதான் ஸ்க்ரப்பினை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஸ்க்ரப்பிங் செய்வதே இறந்த செல்களை முற்றிலும் நீக்க சரியான வழி.

3) ரத்த ஓட்டம் அதிகரிக்க- இப்போது மசாஜ் செய்யும் முறை. மசாஜ் க்ரீமை கழுத்து,முகம் என்று அனைத்து இடங்களிலும் தடவுங்கள். இப்போது கன்னக்களை வட்ட வடிவமாகவும், கண்களை சுற்றி வட்ட வடிவில் மெதுவாகவும், தாடையை கீழிருந்து மேலாகவும், நெற்றியில் நடுவில் ஆரம்பித்து புருவம் முடியும் இடம் வரை கீழாகவும், மீண்டும் கன்னங்களை மேல் புறமாக நன்றாக அழுத்தமாகவும் , உதடுகளில் வட்ட வடிவில், உதடுகளின் ஓரங்களில் நீள்வட்டமாகவும் மசாஜ் செய்யுங்கள். கழுத்தில் எப்போதும் மேல் புறமாக செய்யுங்கள். மசாஜ் செய்யும் போதே முகத்தை செல்லமாக கிள்ளுவது போல விரல்களால் கிள்ளுவது போல் செய்யுங்கள் இதனால் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இவ்வாறு 10 நிமிஷம் போல செய்யுங்கள்.

4) முகத்தின் துளைகளை திறக்க : இப்போது பேஷியல் சானா அல்லது ஒரு பாத்திரத்தில் கொதிக்கின்ற தண்ணீர் எடுத்து அதில் முகத்தை காட்டி ஒரு துண்டால் உங்களை மூடி நன்றாக ஆவி பிடியுங்கள். முகத்திலிருந்து தண்ணீர் வியர்வை போல் கொட்டும் வரை ஆவி பிடியுங்கள்.

5) அழுக்கு, பிளாக் ஹெட்ஸ் நீக்குதல் – இப்போது பேஷியல் கிட்டில் இருக்கும் குச்சி போன்ற பிளாக் ஹெட்ஸ் ரிமூவரை அல்லது ஸ்பூனை எடுத்துக் கொண்டு, கண்ணாடியைப் பார்த்து, மூக்கின் ஓரங்களில் மெதுவாக அழுத்தவும். மூக்கின் நுனியில் இருக்கு பிளாக் ஹெட்ஸை இவ்வாறு நீக்க வேண்டும். ஒரு டிஷ்யூவை கையில் வைத்துக் கொண்டு அதனைக் கொண்டு அவ்வப்போது மூக்கையும், ரிமூவரையும்(அல்லது ஸ்பூனையும்) துடைத்துக் கொள்ளுங்கள். இதேபோல் தாடையில் இருக்கும் அழுக்கையும் நீக்குங்கள். அங்கே பெரும்பாலும் வொயிட் ஹெட்ஸ் தான் இருக்கும்.images (4)

6) துளைகளை மூட : இப்போது முகத்தில் பேக்கை போடவும். பேக் காயும்வரை வைத்திருந்து கழுவவும். பேக் போட்டிருக்கும் போது பேசவோ, முகத்தின் தசைகளை அதிகம் அசைக்கும் வண்ணம் சிரிப்பதோ வேண்டாம். ஏனெனில் பேக் முகத்தை இறுக்கமாக ஆக்கும்போது இவ்வாறு தசைகளை ஸ்ட்ரெயின் செய்தால் முகத்தில் சுருக்கம் விழும். பேக் போடுவதால் திறக்கப்பட்ட துளைகள் மூடிவிடும்.

இதுவே பேஷியல் செய்யும் முறை.

Related posts

கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய பின்பற்ற வேண்டியவை

nathan

உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்….

nathan

இதை நீங்களே பாருங்க.! சுண்டி இழுக்கும் குஷ்பு.!

nathan

ஆண்மை குறைவை போக்க, இத செய்து வாங்க…

sangika

பெண்களே மயக்கும் கண் இமைகள் வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்

nathan

காதல் பரிசுகளை விற்று கோடீஸ்வரரான எலோன் மஸ்க்கின் டீன் ஏஜ் காதலி!

nathan

மூக்கின் அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ் tamil beauty tips

nathan

முட்டைகோஸ் பேஷியல்(home facial)

nathan

வெளியான தகவல்! சர்வதேச ஏலத்திற்கு செல்லும் இலங்கையின் இரத்தினக்கல்!

nathan