28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201604061125398529 Benefits Of Multani Mitti SECVPF
மேக்கப்

கண்ணாடி அணியும் பெண்களுக்கான மேக்கப் டிப்ஸ்

கண்களைச் சுற்றி வரும் கருவளையங்களைப் போக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தி நல்ல பலனை அடையலாம்.

கருவளையங்களைப் போக்கும் முல்தானி மெட்டி
* கண்களைச் சுற்றி வரும் கருவளையங்களைப் போக்க இயற்கை வழிகளைக் காணும் முன், அந்த கருவளையங்கள் ஏன் வருகிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். கருவளையங்கள் வயிற்றுப் பிரச்சனைகள், மன அழுத்தம், வேலைப்பளுவுடன் தூக்கமின்மை போன்றவைகளால் வரக்கூடும். கருவளையங்களைப் போக்க பல வழிகள் உள்ளன. ஆனால் அதில்

* முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவதால், கருவளையங்கள் நீங்குவதோடு கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களும் நீங்கும். கருவளையங்களைப் போக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தும் வழிமுறைகள்

* முல்தானி மெட்டி பொடியை வெள்ளரிக்காய் சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, கருவளையம் மற்றும் முகத்தில் உள்ள கருமையும் நீங்கும்.

* முல்தானி மெட்டி பொடியுடன், பாதாம் பொடி மற்றும் கிளிசரின் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ, முகம் மற்றும் கண்கள் பொலிவுறும்.

* பால் ஈரப்பசையை அதிகரித்து, திசுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முல்தானி மெட்டி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே வாரத்திற்கு இரண்டு முறை முல்தானி மெட்டி பொடியை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ, நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

* முல்தானி மெட்டியுடன் தயிர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து கழுவ, சோர்வடைந்த கண்கள் புத்துணர்ச்சி பெறுவதோடு, கண்களைச் சுற்றியுள்ள கருமையும் அகலும்.

* சருமத்தில் உள்ள கருமையை எலுமிச்சை மிகவும் எளிதில் நீக்கும். அத்தகைய எலுமிச்சை சாற்றினை முல்தானி மெட்டி பொடியுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

* ரோஸ் வாட்டரில் உள்ள உட்பொருட்கள் சரும செல்கள் புத்துணர்ச்சி அடையச் செய்யும். எனவே முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டருடன் சேர்த்து பேஸ் செய்து, முகம் மற்றும் கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து கழுவ, கருவளையம் மட்டுமின்றி, சருமத்தில் உள்ள சுருக்கங்களும் அகலும்.

* உருளைக்கிழங்கின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, முல்தானி மெட்டி பொடியுன் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் கருவளையங்கள் விரைவில் மறையும்.
201604061125398529 Benefits Of Multani Mitti SECVPF

Related posts

லிப்ஸ்டிக் போடுவது எப்படி? – உங்களுக்கும் தெரியாத சில குறிப்புகள்

nathan

பெண்களே மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்கணுமா? இதை படியுங்கள்

nathan

மழைக்காலத்திற்கு ஏற்ற உடைகள் மற்றும் மேக்அப்

nathan

நீண்ட நேரம் மேக்கப் கலையாதிருக்க சில டிப்ஸ்

nathan

வீட்டிலேயே ஹேர் கட் செய்வது எப்படி?

nathan

மாம்பழம் ஒரு அழகுசாதன பொருளா?தெரிஞ்சிக்கங்க…

nathan

டீன்ஏஜ் பெண்களின் அழகுக் கவலை

nathan

கருப்பான பெண்கள் எப்படி மேக்கப் போடலாம்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கன்னங்களின் அழகான ஒப்பனைகளுக்கான 5 முக்கிய குறிப்புகள்

nathan