25.6 C
Chennai
Thursday, Nov 14, 2024
1459229108 7065
அசைவ வகைகள்

சிக்கன் லெக் ப்ரை

தேவையான பொருட்கள்:

சிக்கன் லெக் – 10
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4 அரைத்தது
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு – 1 கப்
முட்டை வெள்ளைக்கரு – 2 அடித்து கொள்ளவும்
கொத்தமல்லி – சிறிது
புதினா – சிறிது
கலர் – தேவைப்பட்டால்
எண்ணெய் – 3 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
1459229108 7065
முதலில் சிக்கன் லெக் பீஸை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் கத்திக் கொண்டு சிக்கன் லெக் பீஸின் தசைப்பகுதியை ஆழமாக கீறி விட வேண்டும். அப்போதுதான் மசாலா அதனுள் நன்கு ஊறும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் தயிர் அல்லது எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள்சேர்த்து கலந்து, அந்த கலவையை சிக்கன் மீது தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். வேண்டுமெனில் கலர் சேர்த்து கொள்ளலாம்.

மற்றொரு பாத்திரத்தில் மைதாவை போட்டு, முட்டையை ஊற்றி, சிறிது தண்ணீர், மீதியுள்ள பச்சை மிளகாய் பேஸ்ட் மற்றும் மிளகு தூளை சேர்த்து சிறிது உப்பு போட்டு, கலந்து கொள்ள வேண்டும். பின் கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து அரைத்த விழுதை கலந்து கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் நனைத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான சிக்கன் லெக் ப்ரை தயார்.

Related posts

நாட்டு ஆட்டு குருமா

nathan

செட்டிநாட்டு ஆ‌ட்டு‌க்க‌றி குழம்பு

nathan

இறால் வறுவல்

nathan

அவசர பிரியாணி

nathan

காஷ்மீரி மிர்ச்சி குருமா: ரமலான் ஸ்பெஷல்

nathan

சென்னை மட்டன் தொக்கு

nathan

சில்லி மீல் மேக்கர்

nathan

கத்தரிக்காய் புளிக்குழம்பு

nathan

முட்டை தக்காளி குழம்பு

nathan