Other News

பொய் சொல்லும் இந்தியா !சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதாக கூறுவது தவறு-சீன மூத்த விஞ்ஞானி

bc3ca pt 1

இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கியது, அங்கு அது 14 நாட்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. இந்நிலையில், விக்ரம் லேண்டர் இறங்கும் பகுதியில் இரவு தொடங்கிய நிலையில், சூரிய வெளிச்சம் இல்லாததால் ரோவர் மற்றும் லேண்டரின் பணி நிறுத்தப்பட்டது. விக்ரம் லேண்டரைப் புதுப்பிக்கும் பணியில் விஞ்ஞானிகள் பகல் நேரத்துக்குப் பிறகும் தொடர்ந்து பணியாற்றினர். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, லேண்டரை உயிர்ப்பிக்க முடியவில்லை. வெப்பநிலை -200 டிகிரி செல்சியஸ் ஆக இருந்ததால் லேண்டர் செயலிழந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தியாவின் சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதாக கூறுவது தவறு என சீன மூத்த விஞ்ஞானி வாங் ஜுன் கருத்து தெரிவித்துள்ளார்.

தென் துருவத்தில் இருந்து 619 கி.மீ தொலைவில் சந்திரயான் தரையிறங்கியதாகவும், ஆனால் அதை நிலவின் தென் துருவமாக கருத முடியாது என்றும் அவர் கூறினார்.

இதுபற்றி “விஞ்ஞானப் பிரச்சாரர்“ன் முதன்மை ஆய்வாளர் திரு.டி.வி.வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம்.

”தென் துருவம் என்பது ஒரு புள்ளி. அதே போல் பூமியில் வடதுருவம், தென்துருவம் என்பது ஒரு புள்ளியை தான் குறிக்கும். உதாரணத்திற்கு நார்வே வடதுருவ நாடு அல்ல.. வடதுருவ பகுதி நாடு.

 

அதே போல் தான் சந்திரயான் தென் துருவப்பகுதியில் தான் இறங்கியது. தென் துருவப்புள்ளியில் இல்லை. ஆகவே.. தென் துருவம், தென் துருவப்பகுதி இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. ” என்று கூறினார்.

ஆகவே… இனி நாம் தென் துருவப் பகுதியில் சந்திரயான் 3 இறங்கியது என்று சொல்வதே சரியானதாக இருக்கும்

Related posts

தனியாக பிரிந்த விக்ரம் லேண்டர்!

nathan

சோகமான செய்தி! ரஜினி ரசிகர்களுக்கு

nathan

காதலித்துவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம்

nathan

சுக்கிரன் சேர்க்கையால் திருமண யோகம், தொழில் முன்னேற்றம் எந்த ராசிக்கு?

nathan

தேங்காய் சாதம்

nathan

இந்த 5 ராசிக்காரங்க நினைத்த இலட்சியத்தை அடையும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாம்…

nathan

ஜோவிகா இந்த Relationship-ல இருக்கா?

nathan

ஃபேமிலி சீக்ரெட்ஸ் பகிர்ந்த பிரியங்கா அம்மா

nathan

புகைப்படங்களை வெளியிட்ட…. கௌதம் கார்த்திக்

nathan