24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
meera Vijay Antony3
Other News

இறந்த மகள் பற்றி உருக்கமாக பதிவிட்ட விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி தனது மறைந்த மகள் குறித்த மனதை தொடும் பதிவைப் பகிர்ந்துள்ளார். இசையமைப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் நடிப்புக்குத் திரும்பிய விஜய் அன்டோனி, நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர். இவருக்கு மீரா, லாரா என்ற இரு குழந்தைகளும் பாத்திமா என்ற மனைவியும் உள்ளனர். மூத்த மகள் மீரா தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். செப்டம்பர் 19ம் தேதி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் கிடைத்ததும் தேனாம்பேட்டை போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் விஜய் ஆண்டனி உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்தார். மீராவின் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மனஅழுத்தம் காரணமாக பல வருடங்களாக மருத்துவரை சந்தித்து வந்த அவர், இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பது அவர் மருத்துவரிடம் ஆலோசனை நடத்திய வாட்ஸ்அப் உரையாடலில் தெரியவந்தது.

 

மீராவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், விஜய் ஆண்டனி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, அன்புள்ள நெஞ்சங்களே என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த சாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை வன்மம் இல்லாத ஓர் அமைதியான இடத்துக்கு தான் சென்றிருக்கிறாள். என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள் – உங்கள் விஜய் ஆண்டனி” என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

நடிகை வனிதாவின் மகன் விஜய் ஹரியா

nathan

விஜய்க்கு ஆதரவாக விஜயலட்சுமி -என்ன மிஸ்டர் சீமான்?

nathan

chia seeds benefits in tamil – சியாக்களை (Chia Seeds) பயன்படுத்துவதன் பலன்கள்

nathan

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

nathan

2025ஆம் ஆண்டு வரை கோடியில் புரளும் 3 ராசியினர்கள்

nathan

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்த ரஜினிகாந்த்

nathan

3 புதிய பெண்கள்-இந்தியாவின் முதல் பணக்காரர்கள்..

nathan

அடையாளம் தெரியாமல் மாறிய சுந்தரி சீரியல் கதாநாயகி

nathan

ஆபத்தில் முடிந்த நடிகையின் சவால்!மொத்தம் 583 ஆண்கள்

nathan