31.8 C
Chennai
Wednesday, Jul 16, 2025
1459930615 1097
சரும பராமரிப்பு

கோடைக் காலத்தில் சூரிய வெப்பத்திலிருந்து தோலை பாதுகாப்பது எவ்வாறு?

வெயில் காலத்தின் முக்கிய எதிரி வியர்வை. இதனால் உடலில் துர்நாற்றம், வியர்குரு மற்றும் பங்கல் இன்பக்ஷன் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

வறண்ட சருமம்:

வறண்ட சருமம் உள்ளவர்கள் சருமத்தை பாதுகாக்கவில்லை என்றால் முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதானவர்கள் போல் காட்சியளிப்பார்கள்.

குறிப்பாக வெயில் காலத்தில் இவர்கள் தங்களின் சருமத்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

தினமும் காலையில் பாலாடையுடன் சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி குளிர்ந்த நீரால் கழுவலாம்.

எண்ணைப் பசை மற்றும் சாதாரண சருமம்:

எண்ணை பசை, காம்பினேஷன் மற்றும் சாதாரண சருமம் உள்ளவர்கள், கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பருப்பு தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு பன்னீரில் குழைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவலாம்.

வியர்வையால் ஏற்படும் உடல் துர்நாற்றம், மற்றும் வியர்குருவை போக்க சோப்புக்கு பதில் கடலை மாவு, பயத்தம் மாவு, கஸ்தூரி மஞ்சள், வாசனை பொடி, காய்ந்த எலுமிச்சை பழ தோல் அனைத்தையும் சேர்ந்து பொடி செய்து தினமும் உடலில் தேய்த்து குளிக்கலாம்.

சருமத்தின் மற்றொரு வில்லன் பொடுகு. வெயில் காலத்தில் அதிகமாக வியர்வை ஏற்பட்டு தலை வறண்டு போகும். இதனால் பொடுகு பிரச்னை அதிகரிக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரத்தில் 2 நாட்கள் தலை குளிக்கலாம்.

இவை தவிர வெயில் காலத்தில் சில விஷயங்களை அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டும். வெயில் காலத்தில் உடலில் உள்ள நீர்சத்து குறையும். அதனால் குறைந்த பட்சம் தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

கடைபிடிக்க வேண்டியவை:

* பச்சை காய்கறி, கீரை மற்றும் பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* இளநீர், மோர், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழ சாறு குடிப்பது அவசியம். இதில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால், உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள உதவும்.

* வெளியே வெயிலில் செல்லும் போது சன்ஸ்கிரீன் லோஷன் மற்றும் மாஸ்டரைசர் கிரீம் தடவிக் கொள்ளலாம். இப்போது இவை 2 சேர்ந்த கிரீம்களும் கடைகளில் கிடைக்கிறது. அதனை கை, கால் மற்றும் முகத்தில் தடவிக் கொண்டு வெளியே செல்லாம். இதனால், சூரிய கதிர்களால் சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கலாம்.

* சூரியனின் தாக்கத்தை தவிர்க்க தலைக்கு குடை, தொப்பி கண்களுக்கு கருப்பு கண்ணாடி பயன்படுத்தலாம்.

* வெயிலில் சென்று வீட்டுக்கு வந்ததும் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கிளின்சர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இது சரும ஓட்டையில் உள்ள அழுக்கை நீக்கி சருமத்தை சுத்தமாக்கும்.

* சோப்புக்கு பதில் பேஸ்வாஷ் பயன்படுத்தலாம். வியர்வையால் பங்கல் இன்பக்ஷன் ஏற்படும். மார்பக அடிப்பகுதி அக்குள் போன்ற பகுதியில் வியர்வை தங்கி அதனால் சரும பிரச்னை ஏற்படும்.

* அதை தவிர்க்க வெளியே செல்லும் போது ஆன்டி பங்கல் பவுடர் பயன்படுத்தலாம். முடிந்த வரை வெளியே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக காரம் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். தயிருடன் மஞ்சளை சேர்ந்து குழைத்து சருமத்தில் தடவினால் வெயிலினால் ஏற்பட்ட சரும கருமையை தவிர்க்கலாம்.

1459930615 1097

Related posts

சருமம் பளபளக்க வேண்டுமா?

nathan

சருமத்தை அழகுபடுத்த அரிசி கழுவிய தண்ணீர்

nathan

சிறியதாக இருக்கே… பெரிதாக காட்ட உதவும் பிராக்கள்!

nathan

கறுப்பு நிறமான, அல்லது பொது நிறமான பெண்கள் அழகாக தோற்றமளிக்க சில ஆலோசனைகள்

nathan

சருமத்தை க்ளீன் அண்ட் கிளியரா வச்சுக்க என்ன பண்ணலாம்?

nathan

பளபளப்பான சருமம் வேண்டுமா?

nathan

வறண்ட சருமப் பிரச்சனையா? இதோ இந்த டிப்ஸ் யூஸ் பண்ணுங்க

nathan

முகம் மற்றும் கழுத்து கருமையை போக்கும் வழிமுறைகள்

nathan

தழும்பை போக்க விட்டமின் ஈ யை எப்படி பயன்படுத்தலாம்?

nathan