விழுப்புரம் தக்கடேலைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (42). இவருக்கும் கொள்ளியனூரைச் சேர்ந்த விஜி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.
பிரிந்து சென்ற மனைவியிடம் பணம், நகைகளை கொள்ளையடித்துவிட்டு வேறு ஆணுடன் வாழ்ந்து வந்த மனைவியை பழிவாங்கும் வகையில் கணவன் சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் தக்கடேலைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (42). இவருக்கும் கொள்ளியனூரைச் சேர்ந்த விஜி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தம்பதியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2021ம் ஆண்டு வெங்கடேசனைப் பிரிந்த விஜி, கொல்லியனூரைச் சேர்ந்த கன்னியப்பனை 2வது திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்.
இச்சம்பவத்தில், மனைவி விஜியை பழிவாங்கும் வகையில், விழுப்புரம், கொள்ளியனூர் முழுவதும் போஸ்டர்களை அச்சடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் வெங்கடேசன். விஜிக்கு வெங்கடேசனுடன் திருமணமாகி 25 வருடங்கள் ஆகிறது, இவர்களுக்கு அனு அம்மு என்ற இரண்டு மகள்களும் ஒரு பேரனும் உள்ளனர்.
சமீபத்தில் என்னிடம் 20 பவுன் நகை மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துவிட்டு, தற்போது கொள்ளியனூர் கங்கையம்மன் கோவில் வீதியில் வசிக்கும் கன்னியப்பனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறினார். இதுகுறித்து விஜி வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.