26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
IMG 2709
அசைவ வகைகள்

முனியாண்டி விலாஸ் கோழி குழம்பு / Muniyandi Vilas Chicken Curry

முனியாண்டி விலாஸ் சிக்கன் கரி. ஆகா கேட்கும் போதே சுவை நினைவுக்கு வரும் இல்லங்களா!!! முனியாண்டி விலாஸ் நான் வெஜ் க்கு பெயர் போன ஹோட்டல். அதனாலேயே நிறைய நான் வெஜ் ஹோட்டல்கள் அந்த பெயரை வெய்பதுண்டு. இன்னைக்கு நான் ரொம்ப டேஸ்ட்டான ரொம்ப ஈசியான சிக்கன் கரி எப்படி செய்றதுன்னு சொல்றேன். செய்து சாப்பிட்டு பாருங்க,கண்டிப்பா ஹோட்டல்ல சாப்பிட்ட எண்ணம் தோன்றும். நிச்சயமா திரும்ப திம்ப செய்விங்க.
இப்போ தேவையான பொருட்களை பார்போம்…

தேவையான பொருட்கள்:

கோழி – 1 கிலோ (தோல் நீக்கியது)
வெங்காயம் – 3 பெரியது
தக்காளி – 3 மீடியம் சைஸ்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சிக்கன் மசாலா தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தே.அளவு
அரைத்த தேங்காய் விழுது – 1/2 கப்
கருவேப்பிலை – 2 கொத்து
கொத்தமல்லி இழை – 10 தண்டுகள்
வெங்காயத்தாள் – 1 தண்டு (optional)
எண்ணெய் – 3 டே.ஸ்பூன்
IMG 2709
அரைக்க :

இஞ்சி – 10 கிராம் (அ) 2 இஞ்ச்
பூண்டு – 10 கிராம் (அ) 5 -6 பெரிய பல்
வரமிளகாய் – 4 – 5 (அ) உங்கள் சுவைகேர்ப்ப
கிராம்பு/லவங்கம் – 10
பட்டை – 2 இஞ்ச்
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கசகசா – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதல்ல அரைக்க பட்டியலில் குடுத்திருக்க பொருட்களை கொஞ்சமா தண்ணீர் சேர்த்து அரச்சு தயரா வச்சுக்குங்க.
IMG 2684
ஒரு அடி கனமான அழமான பத்திரத்துல 3 டே.ஸ்பூன் எண்ணெய் விட்டு காயவிடனும். அதுல அரச்ச விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை ஃ ப்ரை பண்ணும்.

IMG 2685

பச்சை வாசனை போன பிறகு நீளமா நறுக்கி வச்ச வெங்காயம் கூட கொஞ்சமா உப்பு சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கணும்.

IMG 2686
இப்போ மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிக்கன் மசாலா தூள் சேர்த்து 1 நிமிஷம் கிளறனும்.

IMG 2688

IMG 2689
இப்போ நறுக்கின தக்காளி, கருவேப்பிலை சிறிதளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கணும்.

IMG 2690

IMG 2693
இந்த ஸ்டேஜ்ல சிக்கன் தேவையான அளவு உப்பு சேர்த்து நல்ல கிளறி விட்டு மூடி வச்சுடுங்க.தண்ணீர் விட தேவையில்லை. வேகும் போது சிக்கன் ல இருந்து தண்ணி விடும்.அதுவே போதுமானது.
IMG 2696
IMG 2697

சிக்கன் நல்ல வெந்த பிறகு அரைச்ச தேங்காய் விழுது,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நல்ல கொதிக்க விட்டு எண்ணெய் மிதக்கும் போது தீயை அனைச்சுடுங்க.தண்ணீர் அளவு முழுக்க முழுக்க உங்க விருப்பம்.கிரேவி கொஞ்சம் தண்ணியா வேணும்னா தண்ணீர் கொஞ்சம் அதிகமா ஊற்றலாம். திக்கா வேணும்னா குறைவா (1 டம்பளர்) ஊற்றலாம்.

IMG 2700
கடைசியா பொடியா நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்தாள் சேர்த்து கிளறி மூடி வச்சுடுங்க.
IMG 2708
இது ப்ளைன் ரைஸ், பரோட்டா,சப்பாத்தி, குஸ்கா, பிரியாணி எல்லாத்துக்குமே நல்ல காம்பினேசன். சுட சுட பிடிச்ச காம்பினேசன்ல பரிமாறுங்க.

IMG 2706

Related posts

சிக்கன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்களையும் செய்முறை

nathan

மட்டன் க்ரீன் கறி… காரம் தூக்கல்… ருசி அதைவிட தூக்கல்!

nathan

தக்காளி மீன் வறுவல்

nathan

இறால் உருளைக்கிழங்கு ஃபிரை

nathan

கிராமத்து கோழி குழம்பு

nathan

மீன் குருமா

nathan

குளிர்காலத்தில் இவற்றை செய்கிறீர்களா?

sangika

சூப்பரான இறால் சுக்கா மசாலா

nathan

சிக்கன் கிரேவி / Chicken Gravy

nathan